Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2018: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெறுமா பஞ்சாப் அணி?

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:35 IST)
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன

 
 
11-வது ஐபிஎல் தொடரின் 25-வது ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது ஏழாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்று, புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்க கடினமாக போராடும். அதேபோல்  ஹைதராபாத் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க கடினமாக போராடும். எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments