Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை பதம் பார்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (11:36 IST)
11-வது ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.
 
ஐபில் தொடரின் 30-வது ஆட்டம் புனேயில் உள்ள மகராஷ்டரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 
 
இரு அணிகளுக்கும் இது எட்டாவது போட்டியாகும், சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
 
சென்னை அணியை பொருத்தவரை பேட்டிங்கில் கேப்டன் தோனி, ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, ரெய்னா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் டெல்லி அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், மேக்ஸ்வெல், பிரித்வி ஷா, ரிஷாப் பாண்ட் ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments