Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணியிடம் வீழ்ந்த குஜராத்

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (19:38 IST)
ஐபிஎல் 10வது சீசனில் இன்று நடைப்பெற்ற லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 


 

 
ஐபிஎல் 10வது சீசன் லீக் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன். முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
 
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீரர் ஆம்லா 40 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் அதிராடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்திலே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது. அணியின் கேப்டன் ரெய்னா 24 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிளக்க தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவர் 44 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். 
 
குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா; மருத்துவமனையில் சிகிச்சை! - என்ன ஆச்சு?

இந்திய பவுலர்கள் அபாரம்.. 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments