Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10வது ஐபிஎல் தொடர்: இன்று மும்பை அணியுடன் புனே அணி மோதல்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (12:02 IST)
10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.


 

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் முதல் 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் ஐதராபாத் உள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் புனே அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.


இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், ஜோஸ் பட்லர், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், மிட்செல் ஜான்சன், பும்ரா, மிட்செல் மெக்லெனஹான்

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில்  ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது உஸ்மான் கவாஜா, பென் ஸ்டோக்ஸ், டோனி, ரஜத் பாட்டியா அல்லது மனோஜ் திவாரி, அசோக் திண்டா, அங்கித் ஷர்மா, ஷர்துல் தாகுர், இம்ரான் தாஹிர் அல்லது ஆடம் ஜம்பா.

இன்றைய ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்… தோல்விக்குப் பின் ரோஹித் ஷர்மா வருத்தம்!

ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. இந்தியா தோல்வி..!

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

அடுத்த கட்டுரையில்
Show comments