Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனேவின் வெற்றியை பறித்த அம்பயர்: மும்பைக்கு சாதகமாய் அமைந்த களம்!!

Webdunia
திங்கள், 22 மே 2017 (12:19 IST)
நேற்றைய ஐபிஎல் பைனல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.


 
 
வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட புனே அணியின் தோல்விக்கு, அம்பயர்களின் சில தவறான முடிவுகளும் காரணம் என கூறப்படுகிறது.
 
கடைசி இரு ஓவர்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியது. 19 வது ஓவரில் பும்ரா பந்து வீசியதில் சிறு தவறு இழைக்கப்பட்டது. 
 
19-வது ஓவரின் 5-வது பந்தை ஸ்மித் சிக்சர் அடித்தார். இதனால் பதற்றமடைந்த பும்ரா ஸ்மித்துக்கு உயரமான ஒரு ஃபுல்டாஸ் பந்தை வீசினார்.
 
அந்த பந்தை ஸ்மித் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓடினார். ஆனால் அது நோ பால் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடுவர் நோ பால் அறிவிக்கவில்லை. 
 
இதனால் லெக் அம்பயருடன் ஸ்மித் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சைகை மூலம் அந்த தவரை ஸ்மித் திரும்ப, திரும்ப சுட்டி காட்டினார். ஆனால், அம்பயர் அதை கண்டுகொள்ளவில்லை.
 
மேலும், முதலில் எல்பிடபில்யு என கூறி அவுட் என நிர்ணயம்செய்யப்பட்ட முதல் விக்கெட்டும் அவுட் இல்லை. இதுவும் அம்பயரின் கவனக்குறைவே.
 
ஒருவேளை இவையனைத்தும் சரியாக இருந்திருந்தால் புனே வெற்றி பெருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருந்திருக்கும். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments