Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இன்று தொடங்குகிறது!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (10:44 IST)
ஐபிஎல் சீசன் -10வது கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று வாணவேடிக்கையுடன் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியன் பீரிமியர் லீக் டி-20 தொடரின் 10வது சீசன் கிரிக்கெட் போட்டியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்தியன் பீரிமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கும்  இப்போட்டி மே 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

 
இதில் ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப், புனே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 47 நாட்கள் நடைபெற உள்ள இத்தொடரில், மொத்தம் 60 போட்டிகள்  நடைபெறும்.
 
ஐதராபாத்தில் இன்று  இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறும் துவக்க விழாவில், சீனியர் வீரர்களான சச்சின்  டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments