Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையர்களை எதிர்த்துப் போராட வேண்டும்!

சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்டத் ‌‌தியா‌கி டி.ஆ‌ர்.டி. ‌திருமலைவா‌சி

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2009 (16:04 IST)
இ‌ந்‌தியா‌வி‌‌ன் சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்காக போராடியத் ‌தியா‌கி டி.ஆ‌ர்.டி. ‌‌திருமலைவா‌‌சியுட‌ன் ஒரு ச‌ந்‌தி‌ப்பு.

WD
கொடை‌க்கான‌ல் ஒன்றியம் ப‌ண்ணை‌க்காடு கிராமத்தில் 1922ஆ‌ம் ஆ‌ண்டு ஜூ‌ன் 2ஆ‌ம் தே‌தி ஆலடி‌ப்ப‌ட்டி‌யி‌ல் ‌திருமலை‌ச் செ‌ட்டியா‌ர் - ‌திருமலைய‌ம்மா‌ள் த‌ம்ப‌தியரு‌க்கு மகனாக ‌பிற‌ந்தவ‌ர் ‌திருமலைவா‌சி. இ‌ந்த த‌ம்ப‌தியரு‌க்கு மொ‌த்த‌ம் 2 ஆ‌ண் ‌பி‌ள்ளைகளு‌ம், 7 பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌ம் ‌பிற‌ந்தன‌ர். ‌திருமலைவா‌சி‌யி‌ன் அ‌ண்ண‌ன் ராமசா‌மியு‌ம் ஒரு சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட ‌வீர‌ர். ‌அவரது வ‌ழிகா‌ட்ட‌லி‌ன்படிதா‌ன் ‌திருமலைவா‌சி சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடு‌ப‌ட்டு‌ள்ளா‌ர். ‌

‌ திருமலைவா‌சி‌யி‌ன் த‌ந்தை ‌விவசாய‌ம் செ‌ய்து வ‌ந்து‌ள்ளா‌ர். ப‌ள்‌ளி‌யி‌ல் 9‌ஆ‌ம் வகு‌ப்பு படி‌க்கு‌ம் கால‌த்‌திலேயே, ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராக கா‌ந்‌‌தி‌ஜி ஆற்றிய சொ‌ற்பொ‌ழிவுக‌ளி‌ன்பா‌ல் ஈ‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌திருமலைவா‌சி ப‌ள்‌ளி‌ப் பருவ‌த்‌திலேயே கா‌ங்‌கிர‌ஸி‌ல் இணை‌ந்து ப‌ணியா‌ற்ற‌த் துவ‌க்‌கினா‌ர்.

இந்தியா சுதந்திரம் பெற்றப்பின், 1953ஆ‌ம் ஆ‌ண்டு ‌திருமலைவா‌சி‌க்கு‌ம் கோம‌திய‌ம்மா‌ளு‌க்கு‌ம் ‌திருமண‌ம் நடைபெ‌ற்றது. இவ‌ர்களு‌க்கு வெ‌ங்கடேச‌ன் எ‌ன்ற மகனு‌ம், சும‌தி, ரேவ‌தி, ‌கீதாரம‌ணி, கலாரா‌ணி, சா‌ந்‌தி ஆ‌கிய மக‌ள்க‌ளும் உ‌ள்ளன‌ர். இவ‌ர் த‌ற்போது ‌தியா‌கிகளு‌க்கான ஓ‌ய்வூ‌திய‌ம் பெ‌ற்று வரு‌கிறா‌ர்.

வெ‌ள்ளையனே வெ‌ளியேறு இய‌க்க‌த்‌தி‌ன் ஐ‌ம்பதாவது பொ‌ன்‌விழா ஆ‌ண்டு ‌நினைவு ‌விருதை த‌மி‌ழ்நாடு அரசு இவரு‌க்கு வழ‌ங்‌கி கெளரவித்தது.

இ‌னி அவ‌ருட‌ன்..

தமிழ்.வெப்துனியா.காம்: இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுக் காலம் ஆகிவிட்டது. இந்த 62 ஆண்டுகாலத்தையும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று.

இந்த விடுதலைக்காக ஒரு விலை கொடுக்கப்பட்டது. அந்த விலையில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்தீர்கள். அந்த நாளுக்கும், அப்போது உங்கள் பார்வை, எண்ணங்களில் எப்படிப்பட்ட ஒரு இந்தியா வரணும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அந்த எண்ணத்தோடு இப்போது இந்தியாவைப் பார்க்கும் போது உங்களுக்கு எப்படித் தெரிகிறது?

தியாகி திருமலைவாசி: ஒரு மாறுபட்ட இந்தியாவாக இருக்கிறது. அன்று பார்த்தது வேறு, அன்று இந்தியா இப்படி ஒரு வளர்ச்சியை அடைய வேண்டும் என்று ஆசையாக இருந்தது. நம்முடைய தேசத்தில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் இப்போது இங்கு நடக்கும் அனைத்தும் நேர்மாறாக உள்ளது. எதற்காக சுதந்திரம் வாங்கினோம் என்ற கேள்வியுடன் மனம் கவலை கொள்கிறது.

எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அன்று போராட்டக் காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தீர்களா?

அன்று எல்லோருமே ஒதே பாதையில் சென்று கொண்டிருந்தோம். வேறு வேறு பாதைகளில் போகவில்லை. காந்தியின் அமைதி வழியிலேயே பயணித்தோம். சுதந்திரம் என்ற ஓரே பார்வையில் இருந்தோம். இன்று சுதந்திரத்தை பல வகையில் பங்கிட்டுக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

சுதந்திர காலத்தில் இந்தியா மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். ஆனால், அந்த நேரத்தில் இருந்த சிந்தனை இப்போது இல்லாமல் போய்விட்டது. அது ஏன்?

நம்முடைய வளர்ப்பும், பண்பும் மாறுபட்ட நிலையில் இருப்பதால் இப்படிப்பட்ட ஒரு மாறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரம் பெறுவதற்கு முன் இருந்த நிலையை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. சுதந்திரம் எதற்காக பெறப்பட்டது என்பதையும் யாரும் எடுத்துச் சொல்லவில்லை. அந்த தவறுதான் நாடு தற்போது இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபடும்போது உங்களுக்கு என்ன வயது?

அப்போது எனக்கு 17 வயதிருக்கும்.

17 வயதில் சுதந்திரப் போராட்டம்.. அடிப்பார்கள், உதைப்பார்கள், சிறையில் தள்ளுவார்கள் என்று தெரிந்தும் எப்படி ஈடுபட்டீர்கள ்?

WD
மட்டப்பாறை வெங்கட்ராமையர் என்பவர் சத்தியமூர்த்தியின் சீடர். அவர்கள் எமது இல்லத்திற்கு வந்திருந்தார். அவருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று பிரிட்டிஷ்காரர்கள் கூறியிருந்தார்கள். அதையும் மீறி அந்த சின்ன வயதிலேயே அவரை இல்லத்தில் தங்க வைத்து, அவருக்கு உதவியாக இருந்தோம். அப்போது அவர் மேடைகளில் காந்திய கொள்கைகளைப் பற்றிப் பேசுவார். அந்தக் கருத்துகள் என்னை ஈர்த்தன. மகாத்மாவின் பேச்சுக்களும் எனது பள்ளிக் காலத்திலேயே என்னை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட தூண்டின.

நீங்கள் பிறந்த ஆண்டு எது?

1922 ம் ஆண்டு பிறந்தேன்.

17 ம் வயதில் நீங்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டீர்கள் என்றால் அப்போது 1939ஆம் ஆண்டே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். அதாவது இரண்டாம் உலகப் போர் துவங்கும் காலத்தில் நீங்கள் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

உலகப் போரை பற்றி கூறுங்கள்.

உலகப் போரைப் பற்றியச் செய்திகளைக் கேட்டோம். பிரிட்டிஸ்காரர்களுக்கு உதவக் கூடாது என்று முடிவெடுத்தோம். போருக்கு எதிராக குரல் கொடுத்தோம். அதனால் தடியடிக்கு ஆளானோம்.

உங்களது இந்த போராட்டங்கள் எங்கு நடந்தன?

பழனி, திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற இடங்களில் நடந்தன.

நீங்கள் பிறந்த ப‌ண்ணை‌க்காடு கிராமத்தில், விடுதலைப் போராட்டங்கள் மீது மக்களின் ஈடுபாடு எப்படி இருந்தது?

கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நமது மக்கள் செல்வாக்கில்லாமல் இருந்தனர். எனவே ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஒழிக்க எண்ணினோம், கொடைக்கானலில் இருந்து மச்சூர் பாதையில் கரு‌ப்பா‌யி ஓடை‌யி‌ன் மேலு‌ள்ள பாலத்தை தகர்க்க எண்ணினோம். அந்த பாலம் தகர்க்கப்பட்டால் ஆங்கிலேயர்கள் போக்குவரத்து பாதித்து கஷ்டப்படுவார்கள் என்று எண்ணினோம்.

இந்த திட்டத்தை அறிந்த ஆங்கிலேயர்கள், முன்னதாக காவல்துறையை பாலத்திற்கு அருகே காவலுக்குப் போட்டனர். நாங்கள் கொடைக்கானலில் இருந்து தப்பிச் சென்றோம். பழனியில் கைது செய்யப்பட்டோம்.

இது காந்திய இயக்கத்தின் கீழ் நடைபெற்றிருக்காதே?

இது வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது நடந்த சம்பவம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்டபோது காந்தியின் கொள்கைக்கு எதிரான கொள்கை உங்களிடம் இருந்ததோ?

ஆம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்டபோது, காமராஜர், ராஜாராம்நாயுடு, லட்சுமிபதி ராஜூ, என்எம்ஆர் சுப்புராமன், நேரு தாக்கர் போன்ற ஐந்து தலைவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டது இந்த திட்டம்.

இந்த திட்டம் பற்றியும், கைது நடவடிக்கை பற்றியும் பத்திரிக்கை, வானொ‌லி வாயிலாக செய்தி வெளியானது.

எத்தனை காலம் சிறையில் இருந்தீர்கள்.

6 மாத காலம்.

ஏன் இவ்வளவு குறைவான நாட்கள் போட்டார்கள்?

பாலத்தை தகர்க்க நாங்கள் சதி திட்டம் தீட்டியவர்கள் என்று வெள்ளையர்களுக்குத் தெரியாது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கைது செய்யப்பட்டதால் இவ்வளவு குறைவான நாட்கள் சிறையில் போட்டார்கள்.

உங்களை அதிகமாக பாதித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று சொன்னீர்கள் அல்லவா? எப்படி காந்தியக் கொள்கைக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருந்த நேதாஜியை பிடித்திருந்தது?

FILE
காந்தியின் கொள்கைகள் அனைத்தும், அப்போதைக்கு, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவே இருந்தது. அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது போன்றே இருந்தது. வெள்ளையர்கள் மக்களுக்கு நாளுக்கு நாள் கஷ்டம் கொடுத்து வந்தனர். கொலைகளும் அதிகமாக நடந்து கொண்டிருந்தன. இந்த வன்முறைகளை தாண்டியும் காந்தி அகிம்சாக் கொள்கையிலேயே இருந்தார். இந்த நிலையில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவ புரட்சியை ஏற்படுத்தினார். அவரது புரட்சி நமக்கு பிடித்திருந்தது.

அதை ஆதரிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. நேதாஜியின் முயற்சியும் சரியாக முடியவில்லை. அதற்குள் நாடும் சுதந்திரம் பெற்று அரைகுறையாக முடிந்துவிட்டது.

ஒரு தனிப்பட்ட மனிதராய், போராட்ட தியாகியா‌ய் இல்லாமல், காந்தியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர் ஒரு பெரிய தலைவர், மகான். மனிதத் தன்மையை மீறியவர். ஏன் என்றால், ஆப்ரிக்காச் சென்று படித்து இந்தியா வந்தவர், நமது மதுரை மாநகருக்கு வந்திருந்தபோது கோட்டும், சூட்டுடன் காணப்பட்டார்.

மீண்டும் கிளம்பி மதுரை ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது, ஒரு பெண் ஒரு சேலையை தனது உடம்பில் சுற்றியபடி மீ‌தி சேலையை மரத்தில் கட்டிவிட்டிருந்தாள்.

இது என்ன என்று காந்தி கேட்டார். அதற்கு, அவள் வைத்திருப்பது ஒரே சேலைதான். அதனை துவைத்து உடனே பாதியைக் கட்டிக் கொண்டு மீதியை காய வைக்கிறாள். அந்த பாகம் காய்ந்ததும், அதனைக் கட்டிக்கொண்டு இந்த பகுதியை காய வைப்பார் என்று சொன்னார்கள்.

FILE
உடனே வீடு திரும்பிய காந்தி, கோட்டுகளை களைந்துவிட்டு 4 முழம் வேட்டியை இடுப்பில் சுற்றிக் கொண்டு இனி இதுதான் என் உடை என்று கூறி இந்திய பக்கிரியாகவே மாறினார். கடைசி வரை அந்த உடையிலேயே இருந்து உயிர் நீத்தார்.

வட்ட மேஜை மாநாட்டிற்குச் செல்லும்போது கூட இந்திய பக்கிரியாகவேச் சென்றார். அவர் மக்கள் மனதிலும், என் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்.

விடுதலைப் பெற்ற இந்தியாவில் மகாத்மாவின் கொள்கை எந்த அளவிற்கு பின்பற்றப்படுகிறது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்கு மகாத்மாவின் கொள்கைகள்தான் முக்கியமானவை. ஆனால் அதன் முக்கியத்துவத்தை யாரும் அறிந்திருக்கவில்லையே. தற்போது மகாத்மாவின் கொள்கைகள் பின்பற்றப்பட்டால் ஜாதி, மதம் பற்றிய எந்த பிரச்சினையும் எழாது. வேறுபாடு காணப்படாது. ஏராளமான கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. அந்த காலத்தில் ஒரே கட்சிதான் இருந்தது. மக்கள் அனைவரும் மகாத்மாவின் பின்னாடிதான் இருந்தார்கள்.

தற்போது ஜின்னாதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறார். உங்கள் காலத்தில் ஜின்னாவைப் பற்றிய சிந்தனை எப்படி இருந்தது?

ஜின்னா பிரிவினைக்கு வித்திட்டார். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக இருந்தோம். அவர் அதை பிரிவினைவாதமாக மாற்றினார். வன்முறையை ஏற்படுத்தி பிரிவினைக்கு வித்திட்டதால் அவரைப் பற்றிய எண்ணம் மனதை விட்டுப் போய்விட்டது.
காந்தியின் இயக்கத்திற்கும், நம் நாட்டிற்கு மாறுபட்ட எண்ணத்தை ஜின்னா கொண்டிருந்தார்.

இந்தியாவில் தற்போது காணப்படும் பிரிவுக்கு காரணம் என்ன?

அரசியலும், சமூகமும் சேர்ந்துதான் காரணமாக உள்ளன. எல்லோரும் தற்போது ஜாதி ஜாதி என்று கூறுகிறார்கள். மதத்தை கொண்டு வந்து, அதன் பேரில் கட்சி கொண்டு வருகிறார்கள். நாட்டை ஆள வேண்டிய ஆசையில் மதத்தை, ஜாதியை உருவாக்கி அதன் மூலம் அரசியல் நடத்துகிறார்கள்.

உங்களது அந்த உயர்ந்த சிந்தனைகள் ஏன் எங்களிடம் வராமல் போயின? அது அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லவா?

ஆம், அடுத்த சந்ததியினரே மாறிவிட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தை மறந்துவிட்டனர். இன்று சுயநலக் கட்சிகள்தான் இருக்கின்றன, நாட்டின் பொதுநலன் கொண்ட தேசியக் கட்சிகள் இல்லை. தற்போது தண்ணீரை எடுத்துக் கொண்டால் கர்நாடகாவிற்கு ஒன்று, மகாராஷ்டிராவிற்கு ஒன்று என்று இருக்கிறது. தண்ணீர் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலே நாடு பிளவுபட்டிருப்பது தெரிகிறது.

இயற்கையாக நீர் வளம் கொண்ட இந்த நாட்டில் நாம் குடிக்கக் கூட நீர் இன்றிதானே இருக்கிறோம்.

முன்பு ஒரு முறை நீங்கள் பேசும்போது, இப்போதைய ஆட்சி முறைகளை விட அப்போதைய ஆங்கிலேயே ஆட்சியே நன்றாக இருந்தது என்று கூறினீர்கள். அப்படி உங்களை எண்ண வைத்த விடயம் எது?

அன்று இருந்த நிர்வாகம், அவர்கள் வெள்ளையர்களாக இருந்த போது, அந்த நிர்வாகத்தை அணுகும்போது அந்த நிர்வாகத்தில் மதிப்பு, மரியாதை, பரிவு இருந்தது. இன்று நம் அதிகாரிகளிடம் அந்த பரிவு இல்லை. இன்று நமக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. வெள்ளையர்களிடம் இருந்த பரிவு கூட இன்று நம் அதிகாரிகளிடம் இல்லை. அவர்கள் முரடனாக இருந்தாலும், ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்ற கடமையுணர்வு இருந்தது. இன்று அது இல்லை.

இதனால்தான் அன்று போலிஸ்காரர்களைக் கண்டால் மக்கள் பயந்தார்கள். இன்று அந்த பயம் இல்லை.

ஒவ்வொரு நாடும், தங்களது சுதந்திரப் போராட்டத் தலைவர்களைப் பற்றி பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி மூலமாக தெரிவிப்பார்கள். அதுபோல நமது நாட்டில் சரியாக சொல்லப்பட்டுள்ளதா?

இல்லை. அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் நடவடிக்கைகள் பற்றியோ, போராட்டங்கள் பற்றியோ இன்றைய தலைமுறைக்கு முறையாக எடுத்துச் சொல்லப்படவில்லை. சொல்ல முயற்சிக்கவும் இல்லை.

இது திட்டமிட்டு செய்யப்பட்ட தவறு என்று நினைக்கின்றீர்களா அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்ததா?

இல்லை. இது தான்தோன்றித்தனமான காரியம்.

நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த நிலை ஏன்?

நாட்டுக்காக உழைத்த தியாகிகளை தலைவர்களும், அரசியல் கட்சிகளும் புகழ்கிறார்களே தவிர, அவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லையே. எத்தனையோ தியாகிகள் அரசின் உதவியை நாடாமலும், சிலர் அரசின் உதவி கிடைக்காமலேயே வாழ்ந்து இறந்துள்ளனரே.

105 வயதில் ஒரு அம்மையார், நான் எதற்கும் இந்த சர்க்காரிடம் கையேந்தி நிற்கமாட்டேன் என்றுகூட கூறியுள்ளார். சமீபத்தில் செய்தி வெளியானதே.

அந்த நிலைதான் உள்ளது. இதற்குக் காரணம், சர்க்கார் தியாகிகளை மதிக்கவில்லை, நேசிக்கவில்லை என்று கூறலாம்.

இது கொ‌ஞ்ச‌ம் அர‌சிய‌ல் தழு‌விய கே‌ள்‌வி. அதாவது, ‌த‌ற்போது கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர், நா‌ங்க‌ள்தா‌ன் நா‌ட்டி‌ற்காக போராடிய க‌ட்‌சி‌யின‌ர். ‌தியாகம‌் செ‌ய்த க‌ட்‌‌சி எ‌ன்று ‌பிர‌ச்சார‌ம் செ‌ய்கின்றனர். இது உ‌ங்க‌ள் மன‌தி‌ற்கு ஏ‌ற்புடையதாக உ‌ள்ளதா?

‌ நி‌ச்சயமாக இ‌ல்லை. அ‌ன்று இரு‌ந்த கா‌ங்‌கிர‌ஸ் கட‌்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் இ‌ன்று இ‌ல்லை. அவ‌ர்களது கொ‌ள்கைகளையு‌ம் இவ‌ர்க‌ள் ‌பி‌ன்ப‌ற்ற‌வி‌ல்லை. பே‌ச்சள‌வி‌ல் ம‌ட்டுமே சொ‌ல்‌கிறா‌ர்களே‌த் த‌விர, கா‌ங்‌கிர‌ஸ் கொ‌ள்கையை ம‌தி‌த்து ‌பி‌ன்பற‌்றுவதாக இ‌ன்று‌‌த் தெ‌ரிய‌வி‌ல்லை.

இதையெ‌ல்லா‌ம் பா‌‌ர்‌க்கு‌ம்போது உ‌ங்களு‌க்கு எ‌ப்படி உ‌ள்ளது?

கவலை ஏ‌ற்படு‌கிறது.

87 வய‌தி‌ல் ‌இ‌ந்‌தியாவை‌ப் பா‌ர்‌க்‌கி‌ன்‌றீ‌ர்க‌ள். இ‌ன்றைய இளைஞ‌ர்களு‌க்கு நா‌ட்டு‌ப்ப‌‌ற்று ஏ‌ற்படாம‌ல் இரு‌ப்பத‌ற்கு எ‌ன்ன காரண‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ந்‌தி‌த்து‌ள்‌ளீ‌ர்க‌ளா?

WD
அ‌ன்று இரு‌ந்த சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட எ‌ண்ண‌ம் இ‌ன்று இ‌ல்லை. அ‌ன்றைய ம‌க்க‌ள் மன‌தி‌ல் தேச‌ ப‌க்‌தி இரு‌ந்தது. ஒரு வெ‌றி இரு‌ந்தது. அது இ‌ன்று இ‌ல்லை. அவ‌ர்களது மன‌தி‌ல் சுயநல‌ம் ம‌ட்டுமே உ‌ள்ளது. தேசப‌க்‌தி, நல‌ன் ப‌ற்‌றி யாரு‌க்கு‌ம் கவலை இ‌ல்லை. அவ‌ர்களது க‌ல்‌வியு‌ம் அதனை ‌க‌ற்‌பி‌க்க‌வி‌ல்லை. சொ‌ல்‌லி‌க் கொடு‌க்கவு‌ம் யாரு‌மி‌ல்லை. இ‌ப்போ‌திரு‌க்கு‌ம் தலைவ‌ர்களு‌ம் அ‌ப்படி‌‌யி‌ல்லை.

எ‌ங்களை‌ப் போ‌ன்ற ஊடக‌ங்களை‌ப் ப‌ற்‌றி ‌‌நீ‌ங்க‌ள் எ‌ன்ன‌க் கூற ‌விரு‌ம்பு‌கி‌றீ‌ர்க‌ள்?

‌ சில ப‌த்‌திரி‌க்கைக‌ள் இதனை‌ச் செ‌ய்‌கி‌ன்றன. ‌சில ப‌த்‌‌திரி‌க்கைக‌ள் அவ‌ர்களது ‌வியாபார‌த்‌தி‌ற்காக தவறான ‌விஷய‌ங்களை பர‌ப்பு‌‌கின்றன. தேச ந‌ன்மை‌க்காக செய‌ல்படு‌ம் ப‌த்‌தி‌ரி‌க்கைக‌ள் வள‌ர்‌ச்‌சி அடைவது இ‌ல்லை. மு‌ந்தைய கால‌த்‌தி‌ல் சுதே‌சி‌மி‌த்‌‌திர‌ன் போ‌ன்ற ப‌த்‌தி‌ரி‌க்கைக‌ள் எ‌வ்வளவோ ந‌ன்மை செ‌ய்ய மு‌ற்ப‌ட்டன. பார‌தியா‌ர் நட‌த்‌திய ப‌த்‌ரி‌‌க்கைக‌ள் போ‌ன்றவை இ‌ன்று இ‌ல்லையே. எ‌ந்த செ‌ய்‌தி போ‌ட்டா‌ல் ப‌த்‌திரி‌‌க்கை அ‌திகமாக ‌வி‌ற்பனை ஆகு‌ம் எ‌ன்று அ‌ல்லவா ‌சி‌ந்‌தி‌க்‌கி‌ன்றன‌ர். ம‌க்களு‌க்கு ந‌ன்மை செ‌ய்வத‌ற்காக எ‌ந்த ப‌த்தி‌ரி‌க்கையு‌ம் இ‌ல்லையே?

உலக நாடுக‌ளி‌ல் பா‌ர்‌க்க‌ப்போனா‌ல், ஒரு தலைவ‌ரி‌ன் க‌ட்‌சி‌, அவரு‌க்கு‌ப் ‌பிறகு மாறுப‌ட்ட கொ‌ள்கை‌யி‌ல் போனா‌ல், போரா‌ட்ட ‌வீர‌ர்க‌ள், ‌தியா‌கிக‌ள் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ல் ஈடு‌ப‌ட்டு தஙகளது எ‌தி‌ர்‌ப்‌பினை கா‌ட்டுவா‌ர்க‌ள். அதுபோ‌ன்ற போரா‌ட்ட‌ங்க‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் நட‌க்காதத‌ற்கு‌க் காரண‌ம்?

அதுபோ‌ன்ற போரா‌ட்ட ‌வீர‌ர்க‌ள் ‌த‌ற்போது இ‌ல்லை. அனைவரு‌ம் மறை‌ந்து‌வி‌ட்டன‌ர். சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் பஙகே‌‌ற்றவ‌ர்க‌ளி‌ல் இ‌ன்று ஒரு‌சில‌ர் தானே இரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

‌ நா‌ட்டு‌ப் ப‌ற்றை ம‌க்க‌ளிடையே எ‌வ்வாறு ஏ‌ற்படு‌த்துவது?

அத‌ற்கான வ‌ழி... சுத‌‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌க் கால‌த்‌தி‌ல் ம‌க்க‌ள் மன‌தி‌ல் எ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌சி‌ந்தனை இரு‌ந்ததோ அ‌ந்த ‌சி‌ந்தனையை உருவா‌க்க வே‌ண்டு‌ம். ம‌க்க‌ளி‌ன் வறுமை, க‌ஷ‌்ட‌ங்களை ‌நீ‌க்க அர‌சிய‌ல்வா‌திக‌‌ள் போராட வே‌ண்டு‌ம். தே‌ர்த‌லி‌ன்போது ம‌ட்டு‌ம் ம‌க்களை ச‌ந்‌தி‌ப்பது எ‌ன்ற ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம்.

அ‌ப்போது வெ‌ள்ளைய‌ர்களை எ‌தி‌ர்‌த்து‌ப் போராடினோ‌ம். இ‌ப்போது யாரை எ‌தி‌ர்‌த்து‌ப் போராடுவது?

த‌ற்போது ம‌க்களு‌க்கு இரு‌க்கு‌ம் வறுமை, க‌ஷ‌்ட‌த்தை எ‌தி‌ர்‌த்து‌ப் போராட வே‌ண்டு‌ம். அ‌ன்று வெ‌ள்ளைய‌ர்களை ‌எ‌தி‌ர்‌த்தோ‌ம். இ‌ன்று ந‌ம்மை கொ‌ள்ளையடி‌க்கு‌ம் கொ‌ள்ளைய‌ர்களை எ‌தி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்.

சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட ‌வீர‌ர்களை க‌ண்ட‌றி‌ந்து, அவ‌ர்களு‌க்கான தேவைகளை பூ‌ர்‌த்‌தி செ‌ய்வத‌ற்கான அமை‌ப்பு எ‌ன்று ஒ‌ன்று உ‌‌ள்ளதா?

இதுவரை இ‌ல்லை. ‌நி‌‌ச்சயமாக அதுபோ‌ன்ற ஒரு அமை‌ப்பு உருவா‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம். எத‌ற்கெடு‌த்தாலு‌ம் ஒரு ச‌ந்தேக‌க் க‌ண்ணோ‌ட்ட‌த்துட‌ன் இரு‌க்க‌க் கூடாது.

எ‌‌ன்ன ச‌ந்தேக‌க் க‌ண்ணோ‌ட்ட‌ம்?

இவ‌ர்க‌ள் ‌தியா‌கிகளா இ‌ல்லையா எ‌ன்ற ச‌ந்தேக‌க் க‌ண்ணோ‌ட்ட‌ம். அரசு த‌ற்போது ஏதோ ‌சில சலுகைகளை ‌தியா‌கிகளு‌க்கு வழ‌ங்கு‌கிறது. ‌ஒருவரை ‌தியா‌கி எ‌ன்று ‌நிரூ‌பி‌க்க ‌நீ‌திம‌ன்ற‌ம் செ‌ன்று அ‌த‌ன் ‌தீ‌ர்‌ப்பை‌ப் பெ‌ற்று வர வே‌ண்டியு‌ள்ளது. ஒரு ‌தியா‌கி த‌ன்னுடைய சலுகையை அடைய ‌மிகவு‌ம் ‌சிரம‌ப்பட வே‌ண்டியு‌ள்ளது. இது மாற வே‌ண்டு‌ம்.

நன்றி அய்யா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments