Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2011 உலகக் கோப்பைக்கு பிறகு அயல்நாட்டில் இந்தியாவின் மோசமான ஆட்டம்!

2011 உலகக் கோப்பைக்கு பிறகு அயல்நாட்டில் இந்தியாவின் மோசமான ஆட்டம்!
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (15:56 IST)
2015 உலகக் கோப்பை போட்டிகளுக்கு இப்போதே யோசிக்க ஆரம்பித்தாகிவிட்டது. ஆனால் அந்தந்த தனித்த போட்டிகளில் வெற்றி பெறவேண்டும் என்பதற்கான உத்திகள் இந்தியாவிடம் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.
FILE

குறிப்பாக ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாலு டாப் நாடுகளில் இந்தியாவின் ரெக்கார்ட் வெட்கக் கேடாக உள்ளது. இலங்கை இந்தியாவை விட பெட்டராக உள்ளது என்றே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் ரெக்கார்ட் நன்றாக உள்ளது. 75 ஒருநாள் போட்டிகளில் 43 வெற்றி 26 தோல்வி. இது அனைத்து நாடுகளையும் விட நன்றாக உள்ளது. ஆனால் பிரச்சனை அதுவல்ல. வீட்டுல புலி வெளில எலி குறிப்பாக ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசீலாந்தில் இந்தியா சாதுவான பசுவாக இருந்துள்ளது என்பதே இப்போதைய கவலை.


இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போது பெற்ற 5 வெற்றிகளையும் சேர்த்து இந்த 4 நாடுகளிலும் இந்தியா 8 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது 12-இல் அபாரத் தோல்வி கண்டிருக்கிறது. வெற்றி தோல்வி விகிதம் 0.66. இது இலங்கையைக் காட்டிலும் மோசமாக உள்ளது.
webdunia
FILE

இந்த 4 நாடுகளில் விளையாடாத போது இந்தியா அபாரம் 35 வெற்றி 14 தோல்வி.

இந்த 4 நாடுகளில் இந்தியாவின் பேட்டிங் சராசரி 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 32.65 ஆகவே உள்ளது. வெற்றி பெற இது சத்தியமாக போதாது. மற்ற இடங்களில் பேட்டிங் சராசரி 40 ரன்களுக்கும் மேல் உள்ளது. பந்து வீச்சிற்கு சாதகமான இந்த 4 நாடுகளில் பந்து வீச்சும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஓவருக்கு சராசரி 5.67 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரேலியா, நியூசீ, தெ.ஆ., இங்கிலாந்தில் ஸ்பின் வீச்சாளர்கள் நன்றாக வீசியதில் பாகிஸ்தாந்தான் சிறப்பாக உள்ளது. 11 போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் 29 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் வீழ்த்தியுள்ளனர். காரணம் அஜ்மல் எனும் மேதை. இலங்கை ஸ்பின்னர்கள் 30 போட்டிகளில் 46 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தியா 25 போட்டிகளில் ஸ்பின்னர்கள் கண்ட விக்கெட் வெறும் 55 தான். அதுவும் ஸ்ட்ரைக் ரேட் 50 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று உள்ளது.

முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் இந்த 4 நாடுகளில் இந்தியா பிந்தங்கியுள்ளது. 25 இன்னிங்ஸ்களில் 30 விக்கெட்டுகளையே முதல் 10 ஓவர்களில் எடுத்துள்ளது. இதிலும் பாகிஸ்தான் 2ஆம் இடம்பெற்றுள்ளது. அதுவும் ஓவருக்கு 5 ரன்கள் பக்கம் கொடுத்துள்ளது.
webdunia
FILE

அதேபோல் கடைசி 10 ஓவர்களிலும் இந்த 4 நாடுகளில் 19 இன்னிங்ஸ்களில் 28 விக்கெட்டுகளையே எடுத்துள்ளது. ஓவருக்கு கொடுக்கும் ரன் விகிதம் சராசரியாக 8 ரன்களுக்கும் மேல் 8.5 ரன்களுக்கு சற்றே கீழ்.

2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய வீச்சாளர்கள் இந்த 4 நாடுகளில் வீசிய லட்சணம் வருமாறு:

புவனேஷ் குமார் 80 ஓவர்கள் வீசியுள்ளார் 9 விக்கெட்டுகளுக்கு. தோனி காப்பாற்றும் ஸ்பின் திலகம் அஷ்வின் இந்த 4 நாடுகளிலும் 198 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளையே சும்மா கைப்பற்றியுள்ளார். ஷமி கொஞ்சம் பரவாயில்லை 62 ஓவர்கள் வீசி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் எகாமமி ரேட் இஷாந்தை விட, உமேஷ் யாதவை விட அதிகமாக உள்ளது.

இந்த பெர்பார்மன்சை வைத்துக் கொண்டு இந்திய அணியை அயல்நாட்டில் கூப்பிட்டு விளையாடுகிறார்கள் என்றால் இந்திய ஸ்பான்சர்களே அதற்குக் காரணம், வீரர்கள் அல்ல தோழர்களே!

புள்ளிவிவரம்: நன்றி : கிரிக்இனஃபோ

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil