Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வினோத் காம்ப்ளி 350 ரன் எடுக்கட்டும்! பரிந்துரை செய்த சச்சின்!

வினோத் காம்ப்ளி 350 ரன் எடுக்கட்டும்! பரிந்துரை செய்த சச்சின்!
, புதன், 4 டிசம்பர் 2013 (16:27 IST)
ஒரே மண்ணில் பிறந்து ஒரே மைதானத்தில் விளையாடி ஒன்றாக ஊர் சுற்றி வாழ்க்கையில் எல்லா விளையாட்டுகளையும் விளையாடிய இரண்டு நண்பர்களின் பாதை ஒன்று உச்சத்திற்குச் செல்ல மற்றொன்று அவர் உச்சத்தில் ஏறுவதை வேடிக்கைப் பார்ப்பதாக அமைந்ததுதான் வினோத் காம்ப்ளியின் சோகமான கிரிக்கெட் வாழ்க்கை.
FILE

1988ஆம் ஆண்டு மும்பை ஹேரிஸ் ஷீல்ட் அரையிறுதிப் போட்டியில் காம்ப்ளியும், சச்சினும் இணைந்து 664 ரன்கள் எடுத்தது இன்று இந்தியாவில் நாட்டார் கதையாகியுள்ளது.

அப்போது ஒரு சம்பவம்... அது சுவையான சம்பவம்... காம்ப்ளி 349 நாட் அவுட், சச்சின் டெண்டுல்கர் 326 நாட் அவுட். ஆனால் இருவரும் பயிற்சியாளர் கொடுத்த உத்தரவை மீறி விளையாடிக் கொண்டேயிருந்துள்ளனர். இருவரது பயிற்சியாளர் ராம்கந்த் அச்ரேக்கர் அப்போது மைதானத்தில் இல்லை. அவரது உதவியாளர் லக்ஷ்மண் சவான் இருந்தார்.

அதாவது லஷ்மண் சவான் டிக்ளேர் செய்ய உத்தரவிட்டார். ஆனால் சிறுவர்களான வினோத் காம்ப்ளியும், கேப்டன் சச்சின் டெண்டுல்கரும் சொல் பேச்சு கேட்கவில்லை.
webdunia
FILE

லஷ்மண் சவான் கடுப்பாகி உடனே அச்ரேக்கருக்கு போன் செய்து சொல்லுங்கள் என்றார். அப்போது இடைவேளைதான். அச்ரேக்கருக்கு சச்சின் போன் செய்துள்ளார். அவர் ஸ்கோர் என்ன என்று கேட்டுள்ளார். 700 ரன்கள் என்றது பதில். "உடனே டிக்ளேர் செய்யப்போகிறாயா இல்லையா" என்று அச்ரேக்கர் கத்தியுள்ளார்.

காம்ப்ளி முதலில் "சார் நான் 349 ரன்களில் பேட் செய்கிறேன் என்று சச்சினிடம் போனை கொடுக்க, சார் வினோத் ஒரு ரன் எடுத்தால் 350 ரன்கள்! அதன் பிறகு அவர் அவுட் ஆனவுடன் டிக்ளேர் செய்கிறோம்' என்றார்.

ஆனால் அச்ரேக்கர் மீண்டும் டிக்ளேர் செய்கிறாயா இல்லையா என்று சத்தம்போட்டுள்ளார். இதனை வைபவ் புரந்தாரே என்ற எழுத்தாளர் பதிவு செய்கிறார்.
webdunia
FILE

சரியாக ஒரு ஆண்டு கழித்து சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் உச்சத்திற்குச் சென்றார் வினோத் காம்ப்ளி படிக்கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் வினோத் காம்ப்ளி மாதிரி ஒரு வீரரை நீண்ட காலத்திற்கு சைட் லைன் செய்ய முடியாது. 1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக் காம்ப்ளி 3ஆம் நிலையிலும் சச்சின் 4ஆம் நிலையிலும் இணைந்து இந்திய அணிக்காக விளையாடினர்.

மும்பையில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில்...

காம்ப்ளி 224 ரன்கள் எடுத்தார். இன்று வரை இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் எண்ணிக்கை இதுதான்!
webdunia
FILE

ஜிம்பாவேயிற்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே காம்ப்ளி மீண்டும் ஒரு இரட்டைச் சதம் எடுத்தார் அதாவது 227 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு 6 ஆண்டுகள் கழித்தே சச்சின் டெஸ்ட் இரட்டைச் சதம் காண முடிந்தது.

பிறகு இலங்கைக்கு எதிராக இரண்டு சதங்களை கடினமான சூழலில் எடுத்தார் வினோத் காம்ப்ளி. ஆனால் அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு வினோத் காம்ப்ளி அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

1995ஆம் ஆண்டு 23ஆம் வயதில் காம்ப்ளி 54.2 என்ற டெஸ்ட் சராசரியை வைத்திருந்தார். ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியை அவர் விளையாடவில்லை. அதன் பிறகுதான் 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் கொல்கட்டாவில் கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய காம்ப்ளி அதன் பிறக் அஜாருதீனுடன் பெரிய தகராறில் ஈடுபட்டதகா தெரிகிறது.

பிறகு வினோத் காம்ப்ளி கிரிக்கெட்டில் இல்லை. பிறகு ஒரு முறை சச்சின் டெண்டுல்கர் கேப்டனானபோது..

'நீண்ட நாட்களுக்கு ஆடாமல் தள்ளிவைக்கப்ப்ட்ட சிறந்த பேட்ஸ்மென் காம்ப்ளி' என்று கூறி சச்சின் அவரை ஒருநாள் அணியில் தேர்வு செய்தார். அவரும் மேற்கிந்திய அணிக்கு எதிராக ஹீரோ கோப்பை என்று ஞாபகம் 36 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். அந்தத் தொடரில் அவர் சுமாராக ஆடினார்.
webdunia
FILE

2004ஆம் ஆண்டு வரை அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடினார். வினோத் காம்ப்ளியின் வாழ்க்கை முறையே அவரை காலி செய்தது என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் ஏன் இப்படிக் கூறக் கூடாது? 54 ரன்கள் சராசரி வைத்திருந்த ஒரு வீரரை அணியிலிருந்து நீக்கி அதன் பிறகு பரிசீலனை கூட செய்யாததனால் அவரது கிரிகெட் வாழ்க்கை பாதியில் முடிந்து விட்டதெனக் கூறலாமே?

சச்சின், வினோத் காம்ப்ளி வாழ்க்கை இருவேறு பாதைகளில் சென்றது போல் இருவரைப் பற்றிய கருத்துக்களும் இருவேறு பாதைகளில் பயணிக்க முடியும் என்றே தோன்றுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil