Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னா நீக்கம் ஏன்? புள்ளிவிவரங்கள்!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (16:07 IST)
2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதுகெலும்பாக நடுக்களத்தில் ரெய்னா இருப்பார் ஆகவேதான் அவரை 4ஆம் நிலையில் களமிறக்குகிறோம் என்று தோனி உட்பட அணி நிர்வாகிகள் கூறிவந்தனர்.
FILE

ஆனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை என்பது அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் கரியருக்கு விடப்பட்ட சவாலாகும். ஒருமுறை ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டால் இன்றைய போட்டி உலகில் அதுவும் இந்திய அணியில் இடம்பெறுவது மிக மிக கடினம், ஆகவே ரெய்னாவின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்வு அஸ்தமித்து விட்டது என்றே கூறவேண்டும்.

நீக்கத்திற்கு காரணமான சில விவரங்கள்:

2013 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவில் அவர் 4 அரைசதங்களை அடித்தார். 50, 55, 89 நாட் அவுட், 83 நாட் அவுட். அதன் பிறகு அப்படியே ஆகஸ்ட் 1, 2013 -இல் ஜிம்பாப்வேயிற்கு எதிராக புலாவாயோவில் 65 அடிக்கிறார். இதே ஜிம்பாப்வே தொடரில் அவர் 0, 4, 28 நாட் அவுட் அவ்வளவுதான்.
FILE

பிறகு ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்குகிறது. இதில் அவரது ஸ்கோர் விவரம் வருமாறு: 39, 17, 16, 28.

பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உள்நாட்டு தொடரில்: 0, 23, 34.

தென் ஆப்பிரிக்காவில்: 14, 36.

நியூசீலாந்தில் தற்போது: 18, 35, 31. ஆகிய ஸ்கோர்களை அவர் எடுத்துள்ளார்.

வேடிக்கை என்னவெனில் 2006 முதல் 2013 வரை 4ஆம் நிலையில் களமிறங்கி 15 போட்டிகளில் 116 நாட் அவுட் என்ற சதத்துடன் 529 ரன்களை 44.08 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில்தான் இவரது அதிகபட்ச ஒருநாள் சராசரி வந்துள்ளது.
FILE

ஆனால் 4ஆம் நிலை அல்லாது 5 ஆம் நிலையில் 2006 முதல் 2014 வரை 60 இன்னிங்ஸ்களில் 1728 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 34.56 ஸ்ட்ரைக் ரேட் 91.57.

6 ஆம் நிலையில் கள்மிறங்கி 56 போட்டிகளில் 56 இன்னிங்ஸ்களில் 1606 ரன்களை எடுத்துள்ளார் சராசரி 37 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் 93.20. ஒட்டுமொத்தமாக பார்த்தால் அவ்வளவு மோசமாக ஆடவில்லை என்றே தெரிகிறது ஸ்ட்ரைக் ரேட் எப்போதும் 89க்கும் மேல்தான் உள்ளது.2008ஆம் ஆண்டு பீக்கில் இருந்துள்ளார். 18 இன்னிக்ஸ்கலில் 680 ரன்கள் சராசரி 45.33 ஆகும். அதன் பிறகு சிறந்த சராசரி 2012 சீசனில் வைத்துள்ளார், 17 இன்னிங்ஸ்களில் 492 ரன்கள் சராசரி 41.

தனது பெரும் பிரச்சனையான ஷாட் பிட்ச் பந்து வீச்சை முறியடிக்க அவர் எந்த வித முயற்சியும் மேற்கொள்ளாததால் பவுலர்கள் ரெய்னா இறங்கினாலே நான் போடறேன் நீ போடறேன் என்று அடித்துக் கொண்டனர். வந்து ஒரு ஷாட் பிட்ச் பந்து அவ்வளவுதான் அவுட்.
FILE

பயிற்சியாளர்கள் கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன், தற்போது பிளெட்சர் ஒருவரும் அவரது பிரச்சனையை சரி செய்ததாக தெரியவில்லை.

மொத்த்மாக 2005 முதல் 2014 வரை 189 ஒருநாள் போட்டிகளில் 162 இன்னிங்ஸ்களில் 4596 ரன்களை 35.35 என்ற சராசரியில், அதிகபட்ச ஸ்கோர் 116 நாட் அவுட். 3 சதம், 29 அரை சதம், 391 பவுண்டரிகள், 90 சிக்சர்கள். ஸ்ட்ரைக் ரேட் 91.35.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

Show comments