25 கிரேட்டஸ்ட் குளோபல் லிவிங் லெஜண்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் சச்சின், ரஜினிகாந் சந்தித்துக் கொண்டனர்.
ரஜினியைப் பற்றி சச்சின் கூறியது இதோ:
" அவரைச் சந்தித்தது அபூர்வமான நிகழ்வு. தென் பகுதியிலிருந்து கிரிக்கெட்டிற்கு வரும் வீரர்கள் நம்ப முடியாத அளவுக்கு ரஜினியின் விசிறிகளாக இருந்துள்ளதை பார்த்திருக்கிறேன், நானும் அப்படித்தான். நான் துவக்கத்தில் அவரை சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இன்று சந்தித்தவுடன் அவரது எளிமை, மற்றும் தன்னடக்கத்தைக் கண்டு அசந்தே போய்விட்டேன். என்ன மனிதர் அவர்!" என்று சச்சின் கூறியதாக டைம்ஸ் இதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரஜினியும் தான் கிரிக்கெட்டை விடாமல் பார்ப்பவன் என்று கூற இருவரும் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளைப் பற்றி பேசியதாக அதே செய்தியில் கூறப்பட்டுள்ளது.