இவரது காட்டடி குறித்து முன்னாள் காட்டடி மன்னன் கிறிஸ் கெய்ன்ஸ் கூறியது உண்மையில் கோரி ஆண்டர்சனுக்கு ஒரு சிறந்த பரிசாகும்: "அவரைப்போன்று பந்துகளை அடிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை" என்று கூறியுள்ளார் கிறிஸ் கெய்ன்ஸ்.
உடல் பருமன், காயங்கள் என்று உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் இருந்த கோரி ஆண்டர்சன் பிறகு தனது சொந்த ஊரான கான்டர்பரியை விட்டு வடக்கு மாகாணத்திற்குக் குடியேறினார். தன் குடும்பம், நட்பு வட்டம் ஆகியவற்றைத் துறந்து கிரிக்கெட்டில் சாதிக்கவே அவர் இங்கு வந்தார்.
அவரைப்பற்றி நமது வீரத் கோலி இவ்வாறு நினைவுகூர்கிறார்:
" கோலாலம்பூர் மற்றும் அன்டர் 19 உலகக் கோப்பையிலும் கோரி ஆண்டர்சன் எங்களை அடித்து நொறுக்கினார். அவர் சில பயங்கரமான சிக்சர்களை அடித்தார். பத்தொன்பது வயதிற்குள்ளாகவே அவர் அவ்வளவு சக்தி வாய்ந்த ஷாட்களை விளையாடுவார். நாங்கள் அப்போது நியூசீலாந்து வந்தபோது கூட டுனெடினில் ஒரு சதம் அடித்தார். அந்தப் பிட்ச் வேறு ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்டு அங்கு வந்து பொருத்தப்பட்ட பிட்ச். ஆடுவது மிக மிக கடினம், அப்போதும் மிகப்பெரிய சிகர்களை அவர் விளாசியதை பார்த்தேன்.
என்னுடைய பேட்சிலிருதே ஒரு வீரர் வந்து பொளந்து கட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. நியூசீலாந்து அணிக்கு அவர் ஒரு பெரிய போனஸ், நடு ஓவர்களில் ராஸ் டெய்லருக்கு பிறகு அவர்களிடம் இத்தகைய ஹிட்டர்கள் இல்லை. இப்போது ஆண்டர்சன் வந்து விட்டார். இவர் மிக மிக அபாயகரமான வீரர் ஆட்டத்தின் போக்கை சில நொடிகளில் மாற்றிவிடுவார்.
என்று கூறுகிறார் கோலி.
16 வயதிலேயே...
அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு வந்து விட்டார். ஆனால் அவர் 2012 ஆம் ஆண்டு வரை முதல் தர கிரிக்கெட்டில் சதம் எடுக்கவில்லை. கடைசியாக அவர் ஒடாகோ அணிக்கு எதிராக 167 ரன்களை 2வது இன்னிங்ஸில் விளாசினார். இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று சொந்த ஊரை விட்டு வந்து கடுமையாக உடல்பயிற்சியில் ஈடுபட்டு 20 கிலோ எடை குறைந்தாராம் ஆண்டர்சன். வந்தவுடனேயே வடக்கு மாகாண அணியில் இடம்பிடித்தார்.
இன்னொரு கில்கிறிஸ்ட், அல்லது ஜெயசூர்யா என்று இவரைக் கூறவேண்டியதுதான்! ஆனால் மனிதர் அடிப்பதைப் பார்த்தால் இவர்களை விடவும் உலகக் காட்டான் என்ற பெயர் எடுப்பார் போல்தான் தெரிகிறது.