Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடி திருத்தும் நிலையமான பாக். கிரிக்கெட் பயிற்சி முகாம்!

Webdunia
வியாழன், 2 மே 2013 (15:03 IST)
FILE
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின், குறிப்பாக பந்து வீச்சாளர்களின் ஹேர் ஸ்டைல் எப்போதுமே அலாதியானது. இம்ரான், வாசிம் அக்ரம், சிகந்தர்பக்த், ஷோயப் அக்தர், அப்ரீடி, இளம் வேகப்பந்து வீச்சாளரும் சூதாட் டபுகழ ் மொகமது ஆமீர், ஆசிப்... என்று அலாதியான முடியழகிற்கு பெயர் போனவர்கள் அதிகம்.

இந்த நிலையில் முன்னாள் முடியழகன் வாசிம் அக்ரம் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வேகப்பந்து வீச்சு கிரிக்கெட் முகாமில் இளம் வீச்சாளர்கள் முடியை அழகாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று வாசிம் அக்ரம் அறிவுறுத்தி வருகிறார்.

பந்து வீச்சு நுணுக்கங்களுக்கு பயிற்சி அளிப்பதோடு பாகிஸ்தானின் முன்னணி முடிதிருத்தும் நிபுணர் நபில அகமட் என்பவரை வைத்து வீரர்களுக்கு முடி திருத்தும் படலௌம் அங்கு அரங்கேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் தூதர்கள் எனவே இவர்கள் கண்டபடி தலையை பரட்டையாக வைத்துக் கொள்வது கண்ணை மறைக்கும் வரை நீளமாக முடியைத்தொங்க விடுவது போன்று இருக்கக்கூடாது. பார்க்க நீட்டாக அழகாக இருப்பதன் அவசியம் அறிவுறுத்தப்பட்டு வருகிறதாம்.

நல்ல ஹேர்ஸ்டைல், நல்ல உடை ஆட்டத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்று வீரர்களுக்கு லெக்சர் அளிக்கப்பட்டுள்ளது.

பார்க்க டீசண்டாக இருப்பது அவசியம் தற்போதைய வீரர்களில் சிலர் அப்படியில்லை என்று வேறு கூறுகிறார் வாசிம் அக்ரம்.

ஓடி வந்து வீசும்போது ஜிகுஜிகுவென முடி குலுங்குவது வீரர்களுக்கு அழகு என்றே முன்னாள்கள் கருதி வந்தனர். தற்போது இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பைத் தராமல் டீசண்ட், நீட், தன்னமபிக்கை என்றெல்லாம் பஜனை பாடுவது நியாயமா வாசிம் அக்ரம்?

நம்மூர் இஷாந்த் சர்மாவையும் இந்த கேம்புக்கு அனுப்பி வைங்கப்பா!

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments