Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் உப்பு சப்பில்லாத 'லைக்'குகள் - செய்தியும் படங்களும்!

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2013 (15:19 IST)
FILE
சோஷியல் மீடியா என்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்கள் தங்களுக்கென்று பக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அதன் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை பயங்கரமாகவே உள்ளது.

சானியா மிர்சா சமீபத்தில் தனது பேஸ்புக்கில் உரையாடல் ஒன்றை நடத்த அதற்கு ஏகபோக வரவேற்பு. அதேபோல்தான் மற்றொரு டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, வீனஸ் வில்லியம்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோருக்கும் ஏகப்பட்ட வாசகர்கள் உள்ளனர்.

இவர்கள் அதில் போடும் சில எக்ஸ்க்ளூசிவ் படங்களுக்கு மயங்காத ரசிகர்கள் இல்லவேயில்லை என்றே கூறிவிடலாம்.

சனியா மிர்சாவுக்கு பேஸ்புக்கில் இருக்கும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 11,82,303, மரியா ஷரபோவாவுக்கு அவர் கூறுவதி படி பார்த்தால் 10,888,601 ஃபாலோயர்ஸ்!

இதோ சில 'செலிபிரிட்டிகளின்' படங்களும் அதற்கு கிடைத்த லைக்குகளும்:

நேற்று மாலை மரியா ஷரபோவா தனது 'ட்ரெய்னருடன்' இருக்கும் போட்டோவை தனது வலைத்தளத்தில் வெளியிட்டார்:
FILE

இந்தப் படத்திற்கு நிமிடத்தில் 50,000 லைக்குகள் குவிந்துள்ளன.

மேலும் அரிய படங்கள ்:

FILE


இத்தாலியில் வீனஸ் வில்லியம்ஸ்: இந்தப் படத்திற்கு கண் சிமிட்டும் நேரத்தில் 12,000 லைக்குகள் விழுந்ததாம்!

FILE


மேற்கண்ட படத்திற்கு 6000 லைக்குகள் சுமார் 100 பேர் இதனை 'ஷேர்' செய்துள்ளனர்.




FILE

அக்டோபர் 7ஆம் தேதி வீனஸ் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார் ஏகப்பட்ட 'லைக்ஸ்'!

FILE


தோனி தனது வலைத்தளத்தில் இட்ட படம் - சுமார் 40,000 லைக்குகள் ஒரு 10 மணி நேரத்தில்!

ரோஜர் பெடரரின் கையெழுத்துக்கு முண்டியடிக்கும் ரசிகர்கள்; இவரது பேஸ்புக் ஃபாலோயர்ஸ் இதுவரை 13,408,860 ஆம்:

FILE


ஷரபோவா மேற்கு லண்டனில்: இந்தப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. சுமார் 1 லட்சம் லைக்குகள் சுமார் 1100 பேர் ஷேர் செய்துள்ளதாக தகவல்!

சமீபத்தில் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தனது தளத்தில் 'சாட்டிங்' செஷன் ஒன்றை நடத்தினார். 50,000 பேர் பின்னூட்டம் இட்டனராம். இதைத் தவிர 20,000 லைக்குகள் வேறு:

FILE


பின்நவீனத்துவம் என்ற ஒரு விமர்சனத் தத்துவம் இலக்கிய, தத்துவ அகாடமிக் வட்டங்களில் பெயர் பெற்ற ஒரு இயக்கமாகும், அல்லது ஆட்டமாகும் ( Play). பின் நவீந்னத்துவம் Image Spinning என்ற ஒரு கருத்தாக்கத்தை விவரிக்கிறது.

நடப்பு பின்நவீன யுகத்தில் இமேஜ் ஸ்பின்னிங்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. வரும் லோக்சபா தேர்தல்களின் போது கூட சோஷியல் மீடியாக்களின் தாக்கம் வெற்றி தோல்விகளை பெருமளவு தீர்மானிக்கும் என்றே கூறப்படுகிறது.

இது வெற்று பிம்பங்களின் ஆட்சி! கட்புலன்களுக்கு மட்டுமே விருந்து கொடுக்கப்படும் அரசியல்! சிந்தனைக்கு அறிவிற்கு அல்ல! என்ற விமர்சனச் சிந்தனையையும் இங்கு குறிப்பிடக் கடமைப் பட்டுள்ளோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

Show comments