1992 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் தென் ஆப்பிரிக்கா வந்த பிறகு இரண்டு அணிகள்தன் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. ஒன்று இங்கிலாந்து. இரண்டாவது ஆஸ்ட்ரேலியா, 7 தொடர்களில் 5 தொடர்களை தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்ட்ரேலியா வென்றுள்ளது. இது ஒரு மகத்தான் சாதனையாகும். ஏனெனில் எல்லா அணிகளுக்கும் மிகவும் கடினமான ஒரு தொடர் என்றால் அது தென் ஆப்பிரிக்காவில் போய் விளையாடுவதுதான்.
ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், பாண்டிங், தற்போது கிளார்க் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் தொடரை இழக்காமல் ஆஸ்ட்ரேலியா சாதனை புரிந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தன் சொந்த மண்ணில் ஆஸ்ட்ரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதேயில்லை.
கடந்த 16 டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்பிரிக்காவின் முதல் டெஸ்ட் தொடர் இழப்பாகும் இது.
ஆஸ்ட்ரேலியா2012ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியில் டெஸ்ட் தொடரி வெல்கிறது. 2012-இல் கடைசியாக வெஸ்ட் இண்டீஸில் வென்றதோடு சரி.
கேப்டனாக கிரேம் ஸ்மித் கடைசி டெஸ்டை தோற்றார். ஒரு கேப்டனாக கடைசி டெஸ்டை இழக்கும் 13வது கேப்டனாவார்.
சுமார் 118 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர் ஆனார் மிட்செல் ஜான்சன்.