ஓராண்டுக்கு முன்பாக இந்த 'அதிசயக் குழந்தை' ஒழுக்கமின்மை காரணமாக பிசிசிஐ பேட்டிங் அகாடமியினால் வெளியேற்றப்பட்டார்.
ஒரு அருமையான டேலண்ட ்...
வீணாகிவிடுமோ என்று மும்பை கிரிக்கெட் உலகம் அஞ்சியது. ஆனால் பையனை சிறந்த உளவியல் நிபுணரான முக்தா பாவ்ரே என்பவரிடம் காண்பியுங்கள் என்று சர்பராஸ் கானின் தந்தையான நௌஷத் கானுக்கு சிலர் அறிவுரை வழங்கினர்.
இந்த பெண் உளவியல் நிபுணரே 1990களில் ஒரு தேசிய நீச்சல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் பேசிய பிறகு கிரிக்கெட் மட்டுமல்ல வாழ்க்கையையே சர்பராஸ் திரும்பப் பெற்றுள்ளான் என்று கூறுகின்றனர்.
இவரது சிகிச்சையினால் நேற்று தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 பந்துகளில் சதம் வெளுத்துக் கட்டினார் சர்பராஸ் கான். இத்த்னைக்கும் சர்பராஸ் ஆடும்போது இந்திய அன்டர் 19 அணி 93/4 என்று தடுமாறிக் கொண்டிருந்தது. இலக்கோ 271 ரன்கள் ஆனால் என்னவாயிற்று? இந்தச் சிறுவனின் அதிரடிச் சதத்தில் ஆட்டம் 39.3 ஓவர்களில் முடிந்தே போனது.
ஏற்கனவே சர்பராஸ் கான் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட்டில் நாற்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.