Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்லி விக்கெட் எடுத்த ஷேன் வார்ன்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2011 (12:45 IST)
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் இருபது ஓவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு விளையாடிய ஷேன் வார்ன் அடுத்த பந்தை பேட்ஸ்மென் ஸ்வீப் செய்வார் நான் பந்தை வேகமாக வீசப்போகிறேன் என்று சொல்லி வைத்து விக்கெட் எடுத்தார்.

அது போன்று வார்ன் வீழ்த்தியது ஏப்பை சோப்பையான வீரர் அல்ல. பிரிஸ்பன் ஹீட் அணிக்கு விளையாடிய நியூசீலாந்தின் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம்தான் அவர்.

இருபது ஓவர் கிரிக்கெட்டின் போது வீரர்களிடம் மைக்ரோபோன் கொடுக்கப்பட்டு அவர்களிடம் வர்ணனையாளர் பேசுவது வழக்கம், நாம் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் இதனைப் பார்த்துள்ளோம்.

அவ்வாறாக ஷேன் வார்ன் பந்து வீசும்போது மைக்ரோபோனில் அவரிடம் பேசினர். அப்போது அடுத்த பந்தை மெக்கல்லம் ஸ்வீப் செய்ய முயல்வார் நான் ஒன்றை வேகமாக வீசப்போகிறேன் என்று கூறினார். அதே போல் வீச மெக்கல்லமும் வலையில் வீழ்ந்து ஸ்வீப் செய்ய பந்து அவரைத் தாண்டி ஸ்டம்ப்களைப் பெயர்த்தது.

வார்னின ் இந்தப ் பந்த ு பற்ற ி கருத்துக ் கூறி ய வேகப்பந்த ு வீச்சாளர ் ரியான ் ஹாரிஸ ் " பொதுவா க வார்ன ் போன் ற மேதைகள ் இதனைச ் செய்வதுண்ட ு. இந்தப ் பந்த ை இப்பட ி வீசப்போகிறேன ், அவர ் ஆட்டமிழப்பார ் என்ற ு கூறுவதுண்ட ு, ஒருமுற ை கிளென ் மெக்ர ா இத ே போன்ற ு கூற ி விக்கெட ் எடுத்ததா க அறிகிறேன ்" என்றார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… செய்வாரா?

இந்தியாவுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரரின் ஆசை!

கேப்டன் யார் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை… ரிஷப் பண்ட்டுக்கு ஷாக் கொடுத்த சஞ்சய் கோயங்கா!

இந்திய வீரர்களை பயமுறுத்த ஆஸ்திரேலிய ஊடகங்க முயல்கின்றன… சுனில் கவாஸ்கர் காட்டம்!

ரோஹித் ஷர்மா ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும்… இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சொன்ன கருத்து!

Show comments