முதலில் டேர்ன்பாக் வீசிய ஷாட் பிட்ச் பந்தை நகர்ந்து கொண்டு டீப் மிட்விக்கெட்டில் ஒரே இழுப்பு இழுத்தார் பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டு வெளியே சென்றது.
என்னதான் அடித்தாலும், கோட்டுக்கு சற்று வெளியே அடித்தாலும் சிக்சர்தான் மைதானத்திற்கு வெளியே அடித்தாலும் சிக்சர்தான். ஆனால் கெய்ல் எப்போதும் மைதானத்தை விட்டு பந்தை அனுப்புவதில் கில்லாடி. ஏற்கனவே ஒன்றை அனுப்பிய நிலையில் இங்கிலாந்தின் ஆஃப் ஸ்பின்னர் டிரெட்வெல் வந்தார். சற்றே நடந்து வந்து ஒரே தூக்குத் தூக்கினார் பந்து இறங்கவேயில்லை கூரையும் தாண்டிச் சென்றது. அருகில் உள்ள துறைமுகத்திற்கு அது சென்றிருக்கக்கூடும்.
வர்ணனையிலிருந்தவர்கள் ஜொயெல் கார்னர் ஒருமுறை பெட்ரோல் நிலையத்திற்கு அடித்த சிக்சரை விட இது பெரியது என்றே கூறினர்.