கால்பந்து ரசிகரும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்து பிராண்ட் அம்பாசடருமான இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கால்பந்து வீரர் போலவே புதிய ஹேர் ஸ்டைலில் காட்சியளிக்கிறார்.
நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அவர் திடீரென ஹெல்மெட்டைக் கழற்ற மைதானத்தில் அவரது புதிய ஹேர்ஸ்டைலிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இத்தாலி கால்பந்து வீரர் மரியோ பலோடெல்லி போன்று உள்ளது இந்த ஹேர்ஸ்டைல். இவரது இந்த ஹேர்ஸ்டைலைப் பார்த்து பலோடெல்லியே தோனியின் ட்விட்டரில் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கேட்டிருப்பதாக வேறு ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
இது இங்கிலீஷ் பிர ிம ியர் லீக் கால்பந்தை ப்ரமோட் செய்யும் அவரது பணியின் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே இருக்கும் என்று கருதலாம்.