ஒருநாள், டெஸ்ட், T20 என்று அனைத்து வடிவங்களிலும் அவர் 13,779 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் ஒரு இங்கிலாந்து வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். கிரகாம் கூச் இவரை விட 589 ரன்கள் குறைவு. ஆனால் அவர் 20 ஆண்டுகள் ஆடினார். கெவின் பீட்டர்சனோ 10 ஆண்டுகளே விளையாடி இதனை ச ாத ித்துள்ளார். இதனால்தான் இவரது தாக்கம் இங்கிலாந்தில் அதிகம்.
கடந்த 30 ஆண்டுகளில் இங்கிலாந்து உருவாக்க முடியாத ஒரு வீரர் கெவின் பீட்டர்சன். அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்துக்கு சிறந்த பேட்ஸ்மெனாக இருந்துள்ளார் கெவின் பீட்டர்சன்.
டெஸ்ட் சராசரி 47.28 தான். ஆனால் அவரது திறமைக்கு இது மிகவும் குறைவு. நிச்சயம் சச்சின், பாண்டிங், திராவிட் ஆகியோருடன் வைத்து பேசப்படவேண்டிய வீரர்தான் கெவின் பீட்டர்சன்.
2011 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 4 டெஸ்ட் போட்டிகள் இடைவெளியிலும் சதம் என்று அவர் ஸ்கோர் செய்து கொண்டிருந்தார். இது அபாரமான ஒரு விஷயமாகும்.
அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக அபுதாபியில் இவருக்கு சரிவு ஏற்பட்டது. 6 இன்னிங்ஸ்களில் 67 ரன்களையே அவர் எடுத்தார். ஆனாலும் கடைசி 2 ஆண்டுகளில் இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த ஒரு அரிய, கடினமான ஆனால் அனாயச சதமும் இந்தியாவுக்கு எதிராக எடுத்த சதமும் அவரது சராசரியை மீண்டும் 50 ரன்களுக்கு உயர்த்தியது.
கடைசியாக அவர் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது கூட 294 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து வீரர்களில் இரண்டாவது இடம் பெற்றிருந்தார்.
பீட்டர்சன் 2007 ஆகஸ்ட் மாதம் வரை 30 டெஸ்ட் போட்டிகளில் 2898 ரன்களை 52.69 என்ற சராசரியில் பெற்றிருந்தார். பிப்ரவரி 2010 முதல் டிசம்பர் 2011 வரை அவரது சிறந்த பேட்டிங் காலம் ஆகும். இதில் 20 டெஸ்ட் போட்டியில் 1537 ரன்கள் எடுத்திருந்தார் சராசரி 59.11. ஆனால் ஜனவரி 2012 முதல் இப்போது வரை 26 டெஸ்ட்களில் 1820 ரன்கள் சராசரி 38.72 தான்.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆரம்ப கட்டங்களில் அதாவது 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை 78 ஒரு நாள் போட்டிகளில் 3047 ரன்களை விளாசியுள்ளார் சராசரி 48.36 அப்போது இவருக்கு மேல் இருந்தவர் ஷிவ் நரைன் சந்தர்பால். ஆனால் சந்தர்பாலின் ஸ்ட்ரைக் ரேட் 70க்கு சற்று மேல்தான். இதே காலக்கட்டத்தில் எம்.எஸ். தோனி 112 போட்டிகளில் 3935 ரன்களை 46.84 என்ற சராசரியுடன் 90.89 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார்.
தற்போதைய இங்கிலாந்து வீரர்களில் அலிஸ்டர் குக், இயன் பெல், டிராட் ஆகியோர் கெவின் பீட்டர்சனை தொடலாம், அதற்கு முன்னால் இங்கிலாந்தின் ஒரு வீரர் கூட அதாவது 80கள்க்கு பிறகு வந்த ஒரு வீரர் கூட கெவின் பீட்டர்சனுக்கு முன்னால் நிற்க முடியாது.
அவர் களமிறங்கும் 4வது டவுனில் அதிக பட்ச ரன்களை இங்கிலாந்துக்காக எடுத்தவரும் கெவின் பீட்டர்சனே. 6490 ரன்களை இந்த டவுனில் எடுத்துள்ளார் இவருக்கு முன்னால் நமக்கெல்லாம் தெரியாத டெனிஸ் காம்ப்டன் இதே டவுனில் 4000 ரன்களை எடுத்துள்ளார் போல் தெரிகிறது.
இவையெல்லாவற்றையும் விட இங்கிலாந்துக்காக அவர் பெற்றுத் தந்த வெற்றிகள்தான் அவரது முக்கியத்துவம் அடங்கியுள்ளது.
டெஸ்டில் 10 ஆட்ட நாயகன் விருது, ஒருநாள் போட்டிகளில் 10, T20 கிரிக்கெட்டில் 6. மொத்தம் 26 ஆட்ட நாயகன் விருதுகள். பீட்டர்சன் வந்தபிறகு சங்கக்காரா, அப்ரீடி, வாட்சன், ஜயவர்தனே ஆகியோர்தான் இத்தகைய ஆட்ட நாயகன் விருதுகளை குவித்துள்ளனர்.
சிறந்த பவுலர்களுக்கு எதிராக பீட்டர்சன் ஒரு சிறந்த சவால் பேட்ஸ்மென் என்பதையும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன:
இவரது காலத்தில் டேல் ஸ்டெய்ன், ஷேன் வார்ன் இவர் எதிர்கொண்ட சிறந்த பவுலர்கள் கிளென் மெக்ரா, முரளிதரனும் உள்ளனர். இதில் ஷேன் வார்னுக்கு எதிராக அவர் 61.60 சராசரி வைத்துள்ளார். 522 பந்துகளில் 308 ரன்கள் அவரை அடித்துள்ளார் கெவின். டேல் ஸ்டெய்னை புரட்டி எடுத்துள்ளார் என்றே கூறவேண்டும். ஓவர் ஒன்றுக்கு 5 ரன்கள் பக்கம் டேல் ஸ்டெய்னை அவர் விளாசியுள்ளார். உலகில் எந்த பேட்ஸ்மெனும், டேல் ஸ்டெய்னுக்கு எதிராக இத்தகைய சாதனைகளை செய்ததில்லை.
முரளிதரனுக்கு எதிராகக் கூட இவர் ஓவருக்கு 4 ரன்கள் எடுத்துள்ளார். முரளிதரன் பந்தை ஒரு போட்டியில் அவரது பயங்கர ஸ்பின்னுக்கு எதிர் திசையில் ரிவர்ஸ் ஷாட் அடித்து கவர் திசையில் சிக்ஸ் அடித்துள்ளார்.
நியூசீலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களையே ஒருநாள் தொடர் ஒன்றில் அடிக்கடி இடது கையில் ஆடி வெளுத்துக் கட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பீட்டர்சன் ஒரு இழப்புதான். ஆனால் அவர் தென் ஆப்பிரிக்காவில் கரியரை தொடர வாய்ப்புள்ளதா என்பதை பார்க்கவேண்டும்.