2003 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்ட்ரேலியா சென்றபோது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். ஷிவாங்கியும் இந்தியா வந்து சேர்ந்தார். வதோதராவில் இவர் 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவருமே தங்களது பெற்றோரை சம்மதிக்க வைத்தனர்.
ஆனால் 2012ஆம் ஆண்டு...
இருவரிடையேயும் மனஸ்தாபம் ஏற்பட பிரிந்தனர். இர்பான் பத்தான் தனது அண்ணன் யூசுப் பத்தான் திருமணம் முடிந்த பிறகு நமது திருமணம் என்றார். ஆனால் ஷிவாங்கி தேவ் முன்னதாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு நேர்காணல் ஒன்றில் இர்பான் பத்தான் தனது காதலை ஒப்புக் கொண்டார். ஆனால் தற்போது காதல் இல்லை எனவும் பிரிந்து விட்டோம் எனவும் அதே நேர்காணலில் தெரிவித்தார்.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற அவர் கடுமையாக உழைத்து வருவதாக இந்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.