Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருளைக்கிழங்கு சமோசா

உருளைக்கிழங்கு சமோசா

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா மாவு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 
 
செய்முறை:
 
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
* வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மாசாலாவைத் தயார் செய்து வைத்து கொள்ளவும்.
 
* மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
 
* வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் மாவை கரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். அதனை தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும். அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மாசாலா சிறிது வைத்து ஓரங்களை மேலே குறிப்பிட்ட பேஸ்ட் தடவி ஒட்டி விடவும்.
 
* இதே போல் மீதமுள்ள மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும். ஒரு அடிகனமான காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
 
* சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

கண்களில் கருவளையமா? கவலை வேண்டாம்.. இதோ தீர்வு..!

ஏழைகளின் பாதாம் வேர்க்கடலை.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments