முடகத்தான் சூப் செய்ய...

Webdunia
புதன், 17 மே 2017 (16:21 IST)
தேவையான பொருட்கள்:
 
முடகத்தான் கீரை - 100 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
பூண்டு - 5 பற்கள்
சாம்பார் வெங்காயம் - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
முடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய முடகத்தான்  கீரையை தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்பு அதனை இறக்கி வடிகட்டி எடுத்து அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை போட்டு பரிமாறவும்.
 
இதன் சிறப்பு குணம் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பதுதான். மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகளுக்கு காரணம்  மூட்டுகளில் தங்கும் யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் தான். இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடகத்தான் கீரைக்கு உண்டு. முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு  தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?!.. மிஸ் பண்ணாதீங்க..

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments