Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈஸியான மற்றும் சுவையான பேல் பூரி தயார் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள் :
 
பொரி - 2 கப்
ஓமப்பொடி - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்
வேர்க்கடலை - 4 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1 
உருளைக்கிழங்கு - 2
புதினா சட்னி - தேவையான அளவு
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
லெமன் சாறு - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
சாட் மசாலா - கால் ஸ்பூன்
சீரகத் தூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

 
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக்  கொள்ள வேண்டும். 
 
ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அத்துடன், ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரகத்தூள் என ஒவ்வொன்றாக சேர்த்து  நன்கு கிளறி விட்டு, கடைசியாக எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சுவையான பேல் பூரி தயார். மாலை நேர  உணவுக்கு ஏற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments