Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஜிடபிள் மக்கன்வாலா

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2010 (13:06 IST)
தேவையானவை

பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் - 1/4 கிலோ
பச்சைப்பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
தக்காளி சாறு - 2 கப்
பால் - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 தே‌க்கர‌ண்டி
க்ரீம் - 1/2 கப்
வெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

வெங்காயத்தைப் பொடிப்பொடியாக அரியவும்.

மற்ற காய்கள் மற்றும் கிழங்கை ஒரு அங்குல நீளத்துண்டுகளாக்கி ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து மூடியபடி 10 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வேக விடவும்.

இன்னொரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் வெண்ணெய், வெங்காயம் ஆகியவற்றை 2 நிமிடம் `மைக்ரோ ஹை'யில் வைக்கவும்.

அதில் வெந்த காய்கறி, பால், தக்காளி சாறு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 6 நிமிடங்கள் திறந்த நிலையில் 'மைக்ரோ ஹை'யில் வைக்கவும்.

இதனை ச‌ப்பா‌த்‌தி, பரோ‌ட்டா, வெரை‌ட்டி சாத‌‌த்துட‌ன் சே‌ர்‌த்து சா‌ப்‌பிடலா‌ம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments