Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசாலாப் பணியாரம்

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2011 (15:52 IST)
தேவையானவை:

பச்சரிசி - 2 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - 2 ஆழாக்கு
மிளகாய் - 8
வெங்காயம் - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியையும், உளுந்தம் பருப்பையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு உப்பு சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்னர் தேங்காய்த் துருவலையும் சேர்த்து கிளறி அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாகக் கலக்கவும்.

மாவு கெட்டியாகவும் இல்லாமல், தண்ணியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.

பின்னர் வாணலியை வைத்து போதுமான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், தேவையான அளவில் மாவை உருட்டிப் போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான மசாலாப் பணியாரம் தயார். மாலையில் பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments