Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகற்காய் குழம்பு

Webdunia
புதன், 8 டிசம்பர் 2010 (16:45 IST)
முதலில் ஓர் எலுமிச்சம்பழ அளவில் புளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பிறகு நன்றாகக் கரைத்து அரை லிட்டர் புளி தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அந்தப் புளித் தண்ணீரில் இருந்து 100 மி.லி. அளவு எடுத்து ஒரு தனிப் பாத்திரத்தில் விட்டு அதில் 100 கிராம் பாகற்காய் நறுக்கிப் போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பும் போட்டு வேக வைக்கவும்.

காய் நன்றாக வெந்தவுடன் அதிலுள்ள நீரை முற்றிலும் இறுத்து விடவேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் சிறிய கரண்டி அளவு உளுத்தம் பருப்பும், அரை கரண்டியளவு மிளகு, நான்கு மிளகாய் வற்றல்களும், ஒரு சிறு துண்டு பெருங்காயமும் போட்டுச் சிவக்க வறுக்கவும்.

நன்று வறுத்த பின்னர் அதனை மசிய அரைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர், அரைத்த விழுதை, வைத்துள்ள புளித் தண்ணீரில் போட்டுக் கரைத்து, தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதி வந்தவுடன் அதில் பாகற்காய்களைப் போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்னர் சிறிது அரிசி மாவைக் கரைத்து ஊற்ற வேண்டும். அதன்பிறகு மீண்டும் கொதி வந்தவுடன் கடுகைத் தாளித்து அதில் போட்டு இறக்கிவிட வேண்டும்.

அவ்வளவுதான் உடல் நலத்திற்கு உகந்த பாகற்காய் குழம்பு தயார்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments