Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ங்கா‌ய் தோசை

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:12 IST)
இது கேரளா‌வி‌ல் ‌மிக‌ப் ‌பிரபலமான உணவாகு‌ம். கோடை‌ ‌விடுமுறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌பி‌ள்ளைகளு‌க்கு செ‌ய்து தருவத‌ற்கான காலை உணவாகு‌ம்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

ப‌ச்ச‌ரி‌சி - ஆழா‌க்கு
தேங்காய் - 1
சீரகம் -‌ ‌சி‌றிதளவு
உப்பு - 2 ‌சி‌றிதளவு

செ‌ய்யு‌ம் முறை

பச்சரிசியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து கழு‌வி‌வி‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி நா‌‌ன்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தேங்காயை துறுவியோ அ‌ல்லது ‌சிறு துண்டுகளாக நறு‌க்‌கியோ வை‌த்து‌க் கொள்ளவும்.

அ‌ரி‌சியையு‌ம், தே‌ங்காயையு‌ம் சே‌ர்‌த்து ந‌‌ன்கு அரை‌க்கவு‌ம். இர‌வி‌ல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

மறுநாள் காலை‌யி‌ல் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து
தண்‌ணீர் விட்டு கஞ்சி போல் காய்‌ச்‌சி அதனை ‌மீ‌ண்டு‌ம் மாவிலேயே சே‌ர்‌த்து கல‌க்கவு‌ம்.

மா‌வி‌ல் சீரகத்தை போட்டு ந‌‌ன்கு அடி‌த்து, தேவையான அளவுக‌ளி‌ல் தோசை சு‌ட்டு‌க் கொ‌ள்ளவு‌ம்.

தே‌ங்கா‌ய் சே‌ர்‌த்து அரை‌ப்பதா‌ல் தோசை ‌ந‌ன்கு வரு‌ம். இத‌ற்கு தே‌ங்கா‌ய் சட்‌னி அ‌ல்லது கார சட்‌னி ந‌ல்ல இணையாக இரு‌க்கு‌ம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments