Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூழ் வற்றல் பொரியல்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2011 (18:43 IST)
தேவையானவை:

கூழ் வற்றல் - 25
சின்ன வெங்காயம் - 1 கப்
உப்பு - தேவைகேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்.
தாளிக்க: உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்து, உப்பு சேர்த்து, அதில் கூழ்வற்றலையும் போட்டு வேகவைத்து நீரை வடித்து விடவும்.

பின் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்பவற்றை போட்டு, அவை பொரிந்து சிவந்ததும், வெங்காயம் கறிவேப்பிலையைப் போட்டு வதக்கி, வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கவும்.

கூழ் வற்றல் செய்யும் முறை:

5 கப் பச்சரிசியை ஊற வைத்து, கால் கப் உப்பு சேர்த்து, முதல் நாள் மாலை நன்கு நைஸாக ஆட்டி வைக்கவும்.

மறுநாள் 1 கப் அரிசிக்கு 5 கப் என்ற அளவில் தண்ணீர் வைத்து கொதிக்கும்போது, அரைத்த மாவைக் கலக்கி ஊற்றவும்.

மாவு நன்கு வெந்ததும், `ரிப்பன் பக்கோடா' அச்சில் வைத்து பிழிந்து விடவும். மறுநாள் உரித்தெடுத்து, நறுக்கிக் காய வைத்து எடுத்து வைக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments