Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காராம‌ணி பொ‌றிய‌ல்

காராம‌ணி பொ‌றிய‌ல்
, ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:11 IST)
காராம‌ணி பொ‌றிய‌ல் கேரளா‌வி‌ல் ‌மிக‌ப் ‌பிரபல‌ம். அவ‌ர்க‌ள் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு காராம‌ணி பொ‌றியலை செ‌ய்‌வதா‌ல் இ‌ன்னு‌ம் ரு‌சி அ‌திகமாக இரு‌க்‌கிறது. நாமு‌ம் செ‌ய்து பா‌ர்‌க்கலாமே!

காராமணி - 1 ட‌ம்ள‌ர்
வெங்காயம் - 2
கா‌‌ய்‌ந்த மிளகாய் - 3
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலை

செய்முறை

காராம‌ணியை மு‌ன்‌தின‌ம் இரவே த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ஊற வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

மறுநா‌ள் காலை‌யி‌ல் காராம‌ணியை ந‌ன்கு கழு‌வி‌வி‌ட்டு, குக்கரில் போ‌ட்டு ‌சி‌றிது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊ‌ற்‌றி வேக ‌விடவு‌ம்.

3 ‌வி‌சி‌ல் வை‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். காராம‌ணி வெ‌ந்தது‌ம் அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌நீரை வடி‌த்து‌வி‌ட்டு எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வெ‌ங்காய‌த்தையு‌ம், ‌மிளகாயையு‌ம் ‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு லேசாக ‌தி‌ரி‌தி‌ரியாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எண்ணையை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை அரைத்த வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்‌கவு‌ம்.

பி‌ன்ன‌ர் அ‌தி‌ல் காராம‌ணியையு‌ம் போ‌ட்டு ‌கிள‌றி 5 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து இற‌‌க்கவு‌ம்.

உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. சுவையு‌ம் அருமையாக இரு‌க்கு‌ம்.


Share this Story:

Follow Webdunia tamil