Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறிவேப்பிலை குழம்பு!

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2013 (17:45 IST)
கறிவேப்பிலைக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் இருக்கும் கறிவேப்பிலையை தனியாக எடுத்துவைத்துவிடுவா‌ர்கள். இதனை தவிர்க்க கறிவேப்பிலை குழம்பை சுவையாக செய்து தரலாம்.

தேவையானவ ை:

கறிவேப்பிலை - 2 கப்
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

வறுத்து, அரைக்க

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
தனியா - 1 ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
மிளகு -அரை ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6 முதல் 8,
பூண்டு -6 முதல் 8 பல்.
கடுகு, சீரகம், நெய்.

செய்முற ை:

புளியைக் கரைக்கவும். வறுக்கக் கொடுத்துள்ள பொரு‌ட்களை தனித்தனியே சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து, கறிவேப்பிலையை வதக்காமல் சேர்த்து அரைக்கவும்.

புளிக்கரைசலில், அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, கரைத்து வைத்துள்ளதைக் கொட்டி, 1 கப் தண்ணீரும் விட்டு, மிதமான தீயில் மூடி வைத்துத் தளதளவெனக் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments