Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கடலை சுண்டல்

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2010 (17:27 IST)
தேவையானவை:

வெள்ளை மூக்கடலை - 200 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
கொத்துமல்லி
பூண்டு, இஞ்சி
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 5
தனியா - 2 ஸ்பூன்
ஜீரா - அரை ஸ்பூன்
பட்டை லவங்கம்

செய்முறை:

பூண்டு, இஞ்சி, கொத்துமல்லி, பச்சை மிளகாய், காயந்த மிகளாய் ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

இது தவிர, தனியா, பட்டை, லவங்கம் ஆகியவற்றையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மூக்கடலையையும், கடலைப் பருப்பையும் முதல் நாளே ஊற வைத்துக் கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கவும்.

நன்கு வெந்ததும் எடுத்து தண்ணீரை வடிகட்டிவிடவும்.

பின்னர் அதில் அரைத்தவற்றை போட்டு நன்கு கிளறவும்.

பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் அறிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கியவுடன் மசாலா கலந்த சுண்டலை கொடடி நன்கு கிளறவும்.

இதில் கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி வைத்து துண்டுகளாக்கிய பச்சை வெங்காயம், தேவைப்பட்டால் தக்காளி, கொத்துமல்லி போட்டு பரிமாறலாம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments