Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிஃப்ளவர் மஞ்சூரியன்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2011 (17:35 IST)
தேவையானவை:

காலிஃப்ளவர் - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - தேவையான அளவு
பூண்டு - 10 பெரிய பற்கள் (‌ சி‌றியதாக நறுக்கிக் கொள் ளவு‌ம ்)
ஸோயா சாஸ் - ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4 + சில்லரி ஒரு தாள்
( சின்னதாக வெட்டி மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் (கொத்தமல்லி மாதிரி இருக்குமே அதுதான் )
மிளகாய்த் தூள் பசை - ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
மக்காச்சோளம் - ஒரு கை
மைதா மாவு - ஒரு கை
முட்டை (அடித்தது) - 1

செ‌ய்முறை:

காலிஃப்ளவரை முதலில் வேக வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மக்காச்சோள மாவு, மைதா மாவு, முட்டை, உப்பு கல‌ந்த கலவை‌யி‌ல் தடவி எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் பொரியுங்கள்.

அடு‌த்து, வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சியை வதக ்‌கி அ‌தி‌ல ் ஸோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு, பச்சை மிளகாய், சில்லரி, மிளகாய ்‌த்தூ‌ள ் பசை போட்டு லேசாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடுங்கள்.

‌ பி‌ன்ன‌ர் இதில் சர்க்கரையும ், ‌சி‌றிதளவு மக்காச்சோள மாவும் சேர்த்துக் கி ள‌றி பொரித்தெடுத்த காலிஃப்ளவரை கொட ்டி‌க் ‌கிளறு‌ங்க‌ள்.

இரண்டு நிமிடம் வதக்கி எடுத்து சுடச்சுடப் பரிமாறுங்கள். உண‌வி‌ற்கு ‌சிற‌ந்த துணை உணவாக ‌நி‌ச்சய‌ம் இது இரு‌க்கு‌ம்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments