Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்கார வடிசல்

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2011 (19:17 IST)
தேவையான பொருட்கள்:

வெல்லம் - 1/2 கி
மு.பருப்பு - 10 திராட்சை - 10
ஏலக்காய் - 15
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பால் - 1 ஆழாக்கு காய்ச்ச ி யது
சாதிக்காய், பச்சைக்கற்பூரம் - சிறிது
நெய் - 3 ‌‌ ஸ ்பூன்
இலவங்கம் - 4

செய்முற ை:

அடு‌ப்‌ப ில் வாணலியை வைத்து 3 ‌‌ ஸ ்பூன் நெய்யை விட்டு முந்திரி திராட்சையை வறுத்துக்கொள்ள வேண்டும். பின் ஏலக்காய், சாதிக்காய், இலவங்கத்தைப் பொரித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் க.பருப்பு, ப.பருப்பு, அரிசி ரவையை லேசாக வறுத்து வேறு ஒரு கனமான பாத்திரத்தில் நீர்விட்டு, மூன்றையும் நன்றாக வேக வைக்க வேண்டும்.

வெல்லத்தை சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, வேகவைத்த பருப்புடன் சேர்க்க வேண்டும். தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கி விட வேண்டும ்.

வறுத்த முந்திரி திராட்சை, சாதிக்காய், ஏலக்காய் பொடி, பச்சை கற்பூர பொடி, பால் ஆகியவற்றைச் சேர்த்து கரண்டியால் கலக்க வேண்டும். நீர் அதிகமாக இருக்கக் கூடாது. அக்கார வடிசல் கூட்டு போன்று இருத்தல் வேண்டும். ஊட் ட‌ச ் சத்து மிக்க அக்கார வடிசல் ரெடி.

குறிப்பு: பாலை இறக்கியவுடன் தான் விட வேண்டும். மிகச்சூட்டில் விட்டால் திரிந்துவிடும்.

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

Show comments