Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்!

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்!

Webdunia

, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (20:28 IST)
கிபி 1600ல் கிழக்கிந்திய கம்பெனி அமைக்கப்பட்டது. 1639ல் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. 1757ல் பிளாசிப் போர் நடந்தது. இதில், ராபர்ட் கிளைவ் வெற்றி பெற்றார். இந்த வெற்றி இந்தியாவின் கருப்புச் சரித்திரத்திற்கு அஸ்திவாரமிட்டது.

வாணிபம் செய்சந்ததேடி இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் நமது அரசியல் நடவடிக்கையிலும் மூக்கை நுழைத்தனர். கடல்வழி வாணிபத்தின் மூலமாக இந்தியா வந்த பரங்கியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக நமக்கெல்லாம் நஞ்சு வார்த்தை கூறி, நம்மையும் நாட்டையும் அபகரித்தனர்.

தமிழ்திரு நாடுதன்னை பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா - என்றான் பார்போற்றும் பாரதி.

இந்திய சுதந்திர வரலாற்றில் வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்த தமிழர் தம் பங்களிப்பு தலையாயதும் தவிர்க்க முடியாததுமாகும். இந்திவிடுதலைக்காதங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளை இங்கே நாம் நினைவு கூர்வோம்.

வரி கேட்டு வேகம் செய்த வெள்ளையர்களை எதிர்த்து தீரத்துடன் முதன் முதலாக புலியாகப் பாய்ந்தது பூலித்தேவன்தான் என்பது மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை.

இந்திய சுதந்திர வரலாற்றில் இவரது போராட்ட காலம் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்றாலும் வெள்ளை ஓநாய்களை விரட்டி முதன்முதலாக வாள் நீட்டியது பூலித்தேவ்ன் மட்டுமே.

பூலித்தேவன் (1715-1767) :

1755ல் நெல்லையின் நெற்கட்டும்சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், அவனது படைகளையும் விரட்டியடித்து தென்னகத்தின் சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் பூலித்தேவனே.

1767ல் கைது செய்யப்பட்ட பூலித்தேவன் சங்கர நயினார் கோவிலில் வழிபட வேண்டும் என பிரிட்டிஷாரிடம் கேட்ட பூலித்தேவன் கருவறைக்குள் சென்றார். திரும்பி வரவேயில்லை.

வேலு நாச்சியார், மருது சகோதரர்கள்:

பூலித்தேவனைத் தொடர்ந்து, 1780ல் சிவகங்கை வேலு நாச்சியார் முப்படைகளைத் திரட்டி வெள்ளை ஓநாய்களுடன் மோதினார். இவருக்கு உறுதுணையாக இருந்த அவரது ஆட்சியாளர்களான மருது சகோதரர்களும் கிழக்கிந்திய கம்பெனியை அடித்து நொறுக்கி விரட்டியடித்து வெற்றி கண்டனர்.

மருதநாயகம் (1725-1764) :

இந்திய குறுநில மன்னர்களை ஒடுக்க பிரிட்டிஷாரால் வளர்க்கப்பட்டவன் கான்சாகிப். கிழக்கிந்திய கம்பெனியின் கூலிப்படைததளபதியாக இருந்த கான்சாகிப், பின்னாளில் பிரிட்டிஷாரை எதிர்த்த காரணத்தால் தூக்கிலிடப்பட்டார். பூலித்தேவனுக்கு முன்பே 1764ல் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்டவன் கான்சாகிப். மதுரையின் சிவில் கவர்னராக இருந்ததால் கான்சாகிப் மருதநாயகம் என அழைக்கப்பட்டார்.

கட்டபொம்மன் (1760 - 1799) :

பாஞ்சாலங்குறிச்சி பாளையங்கோட்டை மன்னனாகத் திகழ்ந்தார். வரி கேட்டு வந்த வெள்ளையர்களை விரட்டியடித்தார். பீரங்கிகளுக்கும், குண்டுகளுக்கு மத்தியில் வாளும், வேலும் எடுபடவில்லை. இதனால் வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தோல்வியடைந்தார். என்றாலும் அவர்களுக்கு அடிபணிய மறுத்ததால் தூக்கலிடப்பட்டார்.

இவரது தம்பி ஊமத்துரையும் வெள்ளையர்களை எதிர்த்து நின்று வீரமரணம் அடைநதார்.

பூலித்தேவன் (1715-1767) :

1755ல் நெல்லையின் நெற்கட்டும்சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், அவனது படைகளையும் விரட்டியடித்து தென்னகத்தின் சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் பூலித்தேவனே.

1767ல் கைது செய்யப்பட்ட பூலித்தேவன் சங்கர நயினார் கோவிலில் வழிபட வேண்டும் என பிரிட்டிஷாரிடம் கேட்ட பூலித்தேவன் கருவறைக்குள் சென்றார். திரும்பி வரவேயில்லை.

வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் :

பூலித்தேவனைத் தொடர்ந்து, 1780ல் சிவகங்கை வேலு நாச்சியார் முப்படைகளைத் திரட்டி வெள்ளை ஓநாய்களுடன் மோதினார். இவருக்கு உறுதுணையாக இருந்த அவரது ஆட்சியாளர்களான மருது சகோதரர்களும் கிழக்கிந்திய கம்பெனியை அடித்து நொறுக்கி விரட்டியடித்து வெற்றி கண்டனர்.

மருதநாயகம் (1725-1764) :

இந்திய குறுநில மன்னர்களை ஒடுக்க பிரிட்டிஷாரால் வளர்க்கப்பட்டவன் கான்சாகிப். கிழக்கிந்திய கம்பெனியின் கூலிப்படைததளபதியாக இருந்த கான்சாகிப், பின்னாளில் பிரிட்டிஷாரை எதிர்த்த காரணத்தால் தூக்கிலிடப்பட்டார். பூலித்தேவனுக்கு முன்பே 1764ல் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்டவன் கான்சாகிப். மதுரையின் சிவில் கவர்னராக இருந்ததால் கான்சாகிப் மருதநாயகம் என அழைக்கப்பட்டார்.

கட்டபொம்மன் (1760 - 1799) :

பாஞ்சாலங்குறிச்சி பாளையங்கோட்டை மன்னனாகத் திகழ்ந்தார். வரி கேட்டு வந்த வெள்ளையர்களை விரட்டியடித்தார். பீரங்கிகளுக்கும், குண்டுகளுக்கு மத்தியில் வாளும், வேலும் எடுபடவில்லை. இதனால் வெள்ளையர்களுக்கு எதிரான போரில் தோல்வியடைந்தார். என்றாலும் அவர்களுக்கு அடிபணிய மறுத்ததால் தூக்கலிடப்பட்டார்.

இவரது தம்பி ஊமத்துரையும் வெள்ளையர்களை எதிர்த்து நின்று வீரமரணம் அடைநதார்.

திப்பு சுல்தான் :

(1767-69ல் நடந்த மைசூர் போரில் திப்பு வெற்றி பெற்றார். உலகில் முதல் முறையாக ராக்கெட் ஏவுகணையை பயன்படுத்தியவர் திப்பு சுல்தான்தான். 1806ல் வேலூர் புரட்சி.

தீரன் சின்னமலை (1756-1805) :

பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்கும் திப்பு சுல்தானுக்கு தோள் கொடுத்தவர் தீரன் சின்னமலை.

வீரன் சுந்தரலிங்கம் :

கட்டபொம்மனுக்கு பக்கபலமாக இருந்த வீரன். கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிய பின்பும் வெள்ளையரை எதிர்த்து போராடியவர். 1799ல் பிரிட்டிஷாரின் ஆயுத கிடங்கிற்கு தீ வைத்து அங்கேய வீரமரணம் அடைந்தவர். தமிழகத்தில் தற்கொலைப் படையாக செயல் பட்டவர்.

மா.பொ.சி :

மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்ற முழுப் பெயர் கொண்ட இவர், சுதந்திரத்தையும் தேசியத்தையும் தனது கண்களாகப் போறறினார். சுதந்திர போராட்டத்தில் தன்னை அர்பணித்துக் கொண்ட மிகப்பெரிய தியாகி. திருத்தணி எல்லைப் போராட்டத்தின் தளபதியாகத் திகழ்ந்தவர்.

சி. இராஜகோபாலாச்சாரி (1878 - 1972) :

தமிழகத்தில் சேலம் நகரில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். இராஜாஜி என்று அழைக்கப்பட்டவர். காந்தியுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அதில் குறிப்பிட்ததக்கது வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ.வெ.ரா.வுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.

தந்தை பெரியார் (1879-1973) :

அறியாமை இருள் அகலவும், மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும் பாடுபட்டார். 1924ல் கேரளத்தில் வைக்கம் மகா தேவர் கோவில் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகம் நடத்தி வெற்றி பெற்றார். இதனால் வைக்கம் வீரர் என்ற அழைக்கப்பட்டார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார்.

தியாகி விஸ்வநாதாஸ் (1886 - டிசம்பர் 12, 1940) :

நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்புணர்வு கொண்டவர். இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தினால் அண்ணல் காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது “பஞ்சாப் படுகொலை பாரீர் கொடியது பரிதாபமிக்கது” என்று பாடி தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டியவர்.

ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டு ஆங்கிலேய அரசு அஞ்சியது. இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடத்தவர். இவரது “கொக்கு பறக்குதடி பாப்பா” என்ற பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு.ஐயர், 1881 - 1925) :

திருச்சியைச் சேர்ந்த இவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார். 1909ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். 1925ல் பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்த போது வ.வே.சு. மறைந்தார்.

வஉசி(1872-1936) :

இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஆர்வமாக ஈடுபட்டவர். 1906ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் சுதேச இயக்கத்தை வலுப்படுத்த சுதேச கப்பல் கம்பெனியை ஆரம்பித்தார். பாண்டித்துரை தேவர் ரூபாய் 1 லட்சத்தசுதேசி கப்பல் கம்பெனியில் முதலீடு செய்தார். வஉசியின் முயற்சிக்கு திலகரும், அரவிந்தரும் உதவினார்கள். 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு செக்கிழுத்து, கல்லுடைத்தார். 1912ல் விடுதலையாகி 1936ல் மறைந்தார்.

சுப்ரமணிய பாரதி(1882-1921) :

இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதியின் பங்கு அளப்பறியது.

'நொந்தே போயினும்
வெந்தே மாயினும்
நம்தேசத்தவர்
உவந்தே சொல்வது
வந்தே மாதரம்'- என்ற தனது கனல் போன்ற கவிதை வரிகளால் மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர். பெணவிடுதலைக்காகவும் போராடியவர்.

சுப்ரமணிய சிவா :

வ.உ.சிதம்பரனார், பாரதி, சுப்ரமணிய சிவா ஆகியோரை மும்மூர்த்திகள் என அழைத்தனர். தம்முடைய இளவயதிலேயே அரசியல் பிரவேசம் செய்த இவர், தேச விடுதலைப் போராட்டத்திற்கு தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர். காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, திலகரின் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயரின் அடக்கு முறைகளுக்கு ஆளானாலும் கடைசிவரை அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்

மாவீரனவாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) :

ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.
வஉசிக்கு சிறை தண்டனை வழங்கிய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டுககொண்டவீரமரணமஎய்தினார்.

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) :

இந்திய விடுதலைப் போராட்ட தியாகி. 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சாவடி அருணாச்சலம் பிள்ளை :

செங்கோட்டையில் செல்வ செழிப்புடன் பிறந்த இவரின் இல்லத்தில்தான் வாஞ்சிநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை கொலைக்கு உடந்தை என குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றார்.

பா. ஜீவானந்தம் :

படிக்கும் போதே விடுதலை வேட்கை கொண்டதால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அரிஜனத்திற்கு ஆதரவு கொடுத்தார். ஆரம்பத்தில் திராவிட இயக்கம், பொதுவுடமை, பலமுறை சிறைவாசம். ஜீவா என தமிழக மக்களால் கவரப்பட்டார்.

தூக்குமேடை ராஜகோபால் :

ஆறுமுகநேரியில் பிறந்த இவர், உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களில் இளவயதிலேயே கலந்து கொண்டார். பலமுறை சிறை சென்று 1946ல் விடுதலையானார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் :

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பிறந்த இவர், சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். போலீசாரின் அடக்கு முறைகளுக்கு ஆளாகி சிறை சென்றார். கானாடுகாத்தான் தொகுதியில் 1937ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதியை தோற்கடித்தார்.

சுத்தானந்த பாரதி :

சிவகங்கையில் பிறந்த இவர், சிறந்த தேச பக்தராக விளங்கினார். அதிகளவில் தேசபக்தி பாடல்களை இயற்றியுள்ளார். பாரத சக்தி, மகா காவியம், யோகசித்தி இசைப்பாடல்கள் உள்ள் தொகுப்பான கீர்த்தனாஞ்சலி போன்ற தமிழ் நூல்களை எழுதியுள்ளார்.

விஜராகாவாச்சாரியார் :

அன்னை பூமியில் வேரூன்றிய ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை அறவழியில் எதிர்த்து பாடுபட்டவர்களில் சேலம் விஜயராகவாச்சாரியாரும் குறிப்பிடத்தக்கவர்.வக்கீலான இவர், நலிவுற்றவர்களுக்கு உதவுவதற்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். தென்னாட்டு சிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.

நாகம்மையார் :

இவர் பெரியாரின் மனைவி. பெரியாருடன் சேர்ந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். விடுதலை போராட்டத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார்.

அஞ்சலை அம்மாள் :

தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகத்தின் பெருமை காத்தார். 1927ல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தனது குடும்பமே ஈடுபட்டு சிறை சென்றது. உப்பு சத்தியாகிரகம், தனி நபர் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

லீலாவதி :

விடுதலை போராட்ட வீராங்கனையான அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதி. சிறுவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். இவருக்கு காநதிதான் பெயர் வைத்தார். நீலன் சிலை போராட்டத்தின் போது, தனது தாயுடன் சிறை செனறார்.

செண்பகராமன் :

இந்திய சுதந்திர வரலாற்றில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகராமனின் தியாகம் முக்கியத்துவம் வாய்ந்தது. 'ஜெய்ஹிந்த்' என்ற சொல்லை முதன்முதலில் உச்சரித்த பெருமை செண்பகராமனுக்கு உண்டு.12 மொழிக்ளை அறிநதவர். திலகரால் பெரிதும் கவரப்பெற்றவர். ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்தவர்.

காமராஜர் :

தமிழக முதல்வராக இருந்து கல்விக் கண் திறந்த பெருமை கொண்ட காமராஜர், விருதுநகரில் பிறந்தவர். இவருடைய, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவைகளால் 'கருப்பு காந்தி' என அழைக்கப்பட்டார். பிறந்த நாட்டுக்காக திருமண வாழ்வை தியாகம் செய்தவர். சுதந்திர இந்தியாவில் மத்திய அரசை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாக விளங்கினார்.

கக்கன் :

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த அமரர் கக்கன், சிறு வயதிலேயே காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் அடித்தள தொண்டராக பணியாற்றினார். பல முறை சிறை சென்றுள்ளார். பொது வாழ்வுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பேருந்திலேயே பயணம் செய்து வீடு சென்றவர்.

Share this Story:

Follow Webdunia tamil