Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரப் பள்ளு

-சு‌ப்ரம‌ணிய பார‌தியா‌ர்

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:14 IST)
( பள்ளர ் களியாட்டம ்)
பல்லவ ி
ஆடுவோம ே - பள்ளுப ் பாடுவோம ே
webdunia photoWD

ஆனந் த சுதந்திரம ் அடைந்த ு விட்டோமென்ற ு ( ஆட ு)
பார்ப்பான ை ஐயரென் ற காலமும ் போச்ச ே - வெள்ளைப ்
பரங்கியைத ் துரையென் ற காலமும ் போச்ச ே - பிச்ச ை
ஏற்பாரைப ் பணிகின் ற காலமும ் போச்ச ே - நம்ம ை
ஏய்ப்போருக ் கேவல்செய்யும ் காலமும ் போச்ச ே ( ஆட ு)
எங்கும ் சுதந்திரம ் என்பத ே பேச்ச ு - நாம ்
எல்லோரும ் சமமென்பத ு உறுதியாச்ச ு
சங்க ு கொண்ட ே வெற்ற ி ஊதுவோம ே - இதைத ்
தரணிக்கெல ் லாமெடுத்த ு ஓதுவோம ே. ( ஆட ு)
எல்லோரும ் ஒன்றென்னும ் காலம ் வந்தத ே - பொய்யும ்
ஏமாற்றும ் தொலைகின் ற காலம ் வந்தத ே - இன ி
நல்லோர ் பெரியரென்னும ் காலம ் வந்தத ே - கெட் ட
நயவஞ்சக ் காரருக்க ு நாசம ் வந்தத ே. ( ஆட ு)
உழவுக்கும ் தொழிலுக்கும ் வந்தன ை செய்வோம ் - வீணில ்
உண்டுகளித ் திருப்போர ை நிந்தன ை செய்வோம ்.
விழலுக்க ு நீர்பாய்ச்ச ி மா ய மாட்டோம ் - வெறும ்
வீணருக்க ு உழைத்துடலம ் ஓ ய மாட்டோம ். ( ஆட ு)
நாமிருக்கும ் நாட ு நமத ு என் ப தறிந்தோம ் - இத ு
நமக்க ே உரிமையாம ் என் ப தறிந்தோம ் - இந்தப ்
பூமியில ் எவர்க்கும ் இன ி அடிம ை செய்யோம ் - பர ி
பூரணனுக ் கேயடிம ை செய்த ு வாழ்வோம ். ( ஆட ு)

பாரத மாதாவின் கொடி!
- தேசக் கவி பாரதியார்

பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல ்
webdunia photoWD

( தாயுமானவர் அனந்தக்களிப்பு வர்ண மெட்டு)

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல்வந்தே மாதர மென்றே
பாங்கி னெழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

பட்டுத் துகிலென லாமோ? - அதிற்
பாயந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)

இந்திரன் வச்சிர மோர்பால் - அதில்
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால்
மந்திர நடுவுறத் தோன்றும் - அதை
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர் - தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார். (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறற்
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர் (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர், (தாயின்)

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

Show comments