Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் பாளைய‌க்கார‌ர்க‌‌ளி‌ன் புர‌ட்‌சி!

- ச. முருக‌ன்

Webdunia
இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராக த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து முத‌லி‌ல் குர‌ல் கொடு‌த்தது பாளை‌யக்கார‌ர்க‌ள் எ‌ன்றா‌‌ல் அது ‌மிகைய‌ல்ல. ‌வீர‌‌ம் ‌நிறை‌ந்த ம‌ண்‌ணி‌ல் ‌பிற‌ந்த பாளைய‌க்கார‌ர்க‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் ‌வீர‌ம் எ‌ன்ற எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி 'வெ‌ள்ளை அண ு' ச‌ற்று அ‌‌திகமாகவே இரு‌ந்தது எ‌னலா‌ம ். அட‌க்குமுறை‌யை‌ப் பய‌ன்படு‌த்‌தி த‌ங்க‌ளிட‌ம் ‌திறை (க‌ப்ப‌ம ்) வசூ‌லி‌க்க ‌நினை‌த்த ஆ‌ங்‌கிலேய‌ர்களை எ‌‌தி‌ர்‌த்து முத‌ன் முத‌லி‌ல் குர‌ல் கொடு‌க்க‌த் தொட‌ங்‌கின‌ர ். இதுவே சுத‌ந்‌தி‌ர‌ப் போரா‌ட்ட‌த்து‌க்கான மு‌த‌ல் ‌வி‌த்தாக அமை‌ந்தத ு.

க‌ர்நாடக உட‌ன்படி‌க்கை மூல‌ம் பாளைய‌க்கார‌ர்க‌ளிட‌மிரு‌ந்து வ‌ரி வசூ‌லி‌க்கு‌ம் உ‌ரிமையை‌ப் பெ‌ற்ற ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் வரி வசூ‌லி‌க்க ஆ‌ட்‌சியாள‌ர்களை ‌நிய‌மி‌‌த்தன‌ர ். ஆனா‌ல் பாளை‌ய‌க்கார‌ர்க‌ள் ஆ‌ங்‌கிலேயரு‌க்கு அடிப‌ணி‌ந்து ப‌ணிபு‌ரிய ‌விரு‌ம்ப‌‌வி‌ல்ல ை. ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் பாளை‌ய‌க்கார‌ர்க‌ள் வச‌ம் இரு‌ந்த ப‌ல்வேறு இட‌ங்களை ஆ‌‌க்‌‌கிர‌மி‌‌த்தன‌ர ். இதனா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்களை த‌மிழக‌த்‌தி‌லிரு‌ந்து ‌விர‌ட்டுவத‌ற்கு த‌க்க தருண‌த்தை எ‌‌தி‌ர்பா‌ர்‌த்து‌ பாளை‌ய‌க்கார‌ர்க‌ள் கா‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். நா‌ம் இ‌க்க‌ட்டுரை‌யி‌ல் புக‌ழ்வா‌ய்‌ந்த பாளை‌ய‌க்கார‌ர்க‌ளான பு‌லி‌த்தேவ‌ர ், ‌ வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌‌கியோ‌ர் ஆ‌‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராக செ‌ய்த பு‌ர‌ட்‌சியை‌ ‌நினைவு கூ‌ர்வோ‌ம ்.

பு‌லி‌த்தேவ‌ர ்: ‌ வீர‌மு‌ம ், ‌ தீரமு‌ம் ‌நிறை‌ந்த பு‌லி‌த்தேவ‌ரை‌க் க‌ண்டு ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் ‌மிர‌ண்டன‌ர ். இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌‌ங்‌கிலேய ஆ‌ட்‌சியை த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து முத‌லி‌ல் எ‌தி‌ர்‌த்தவ‌ர் எ‌ன்ற ‌சி‌ற‌ப்பு பெ‌ற்றவ‌ர் பு‌லி‌த்தேவ‌ர ். இவ‌ர் ‌திருநெ‌ல்வே‌‌லி‌க்கு அரு‌கி‌ல் உ‌ள்ள நெ‌ற்க‌ட்டு‌ச் செ‌வ்வ‌ல் எ‌ன்ற பாளைய‌த்‌தி‌ல் ஆ‌தி‌க்க‌ம் செ‌ய்து வ‌ந்தா‌ர ். இந்தி ய விடுதல ை வரலாற்றில ் ' வெள்ளையன ே வெளியேறு' என்ற ு முதன ் முதலா க 1755 ஆம ் ஆண்டில ் வீ ர முழக்கமிட்டவர ். இதனால ் இந்தியாவின ் முதல ் விடுதலைப்போர ் எனக ் கருதப்படும ் ‌ சி‌ப்பா‌ய்‌க் கலக‌த்‌தி‌ற்கு‌ம் (1857) முன்னோடியாகக ் கருதப்படுகிறார ்.

இவ‌‌ர் ஆ‌ங்‌கிலேயரு‌க்கு‌ம ், ஆ‌ற்காடு நவா‌ப்பு‌க்கு‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ க‌ப்ப‌ம் க‌ட்ட மறு‌த்ததோடு அவ‌ர்களை கடுமையாக எ‌தி‌ர்‌க்கவு‌ம் செ‌ய்தா‌ர ். இதனா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ப் படைகளு‌ம ், நவா‌ப்‌பி‌ன் படைகளு‌ம் பு‌லி‌த்தேவரை மு‌ற்றுகை‌யி‌ட்டு தா‌க்‌கின‌ர ். ஆனா‌ல் பு‌லி‌த்தேவ‌ர் இதனை‌க் க‌ண்டு அ‌ஞ்சா‌ம‌ல் அவ‌ர்களை எ‌தி‌ர்‌த்து போ‌‌ரி‌ட்டா‌ர ். ‌ வீர‌ம் ‌நிறை‌ந்த பு‌லி‌த்தேவ‌ர் இர‌ண்டு படைகளையு‌ம் ‌திருநெ‌ல்வே‌‌லி‌யி‌ல் இரு‌ந்து ஓ ட, ஓட ‌விர‌ட்டி அடி‌த்தா‌ர ்.

1755 ஆம ் ஆண்டு க‌ர்ன‌ல் எரோ‌ன் த‌ம் கோட்டைய ை முற்றுகையிட்ட ு கப்பம ் கட் ட நிர்ப்பந்தம ் செய்தபோத ு தன்னுடை ய நிலப்பகுதியில் வ‌ரி வசூலிக்கும ் உரிமை ஆ‌ங்‌கிலேய‌ர் எவருக்கும ் கிடையாத ு எ ன வீ ர முழக்கமிட்டு ஆ‌ங்‌கிலேய‌ர்களை விரட்டியடித்த ு முதல ் வெற்ற ி பெற்றார ். அத ே ஆண்டில ் களக்காட்டிலும ், நெற்கட்டுச ் செவல ் கோட்டையிலும ் நடைபெற் ற போரில ் ஆங்கிலேயரின ் கைக்கூலியா ன மாபூஸ்கான ை தோற்கடித்தார ். அதேபோ‌‌ல் திருவில்லிபுத்தூர ் கோட்டையில ் நடைபெற் ற போரில ் ஆற்காட ு நவாபின ் தம்பியைத ் தோற்கடித்தார ்.
1760 ஆம ் ஆண்ட ு யூசு‌ப்கான ் நெற்கட்டுச ் செவல ் கோட்டையைத ் தாக்கியபோதும ், 1766 ஆம ் ஆண்டு கே‌ப்ட‌ன் பெள‌ட்ச‌ன் வாசுதேவநல்லூர ் கோட்டையைத ் தாக்கி ய போதும ் அவற்ற ை முறியடித்த ு வெற்ற ி கொண்டார ். உ‌ய‌ர் அ‌திகார‌த்‌தி‌ற்கு எ‌திராக போராடிய ‌வீரனு‌க்கு உதாரணமாக பு‌லி‌த்தேவ‌‌ரி‌ன் வா‌‌ழ்‌க்கையு‌ம ், போரா‌ட்டமு‌ம் ‌‌சிற‌ப்புற அமை‌ந்து‌ள்ளத ு.


வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன ்: பா‌ஞ்சால‌‌ங்கு‌றி‌‌ச்‌சி பாளை‌ய‌த்தை ஆ‌ட்‌சி செ‌ய்து வ‌ந்த ‌வீர‌பா‌‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌னும் பு‌லி‌த்தேவ‌ர் போலவே ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்த மறுத்து வ‌ந்தா‌ர ். ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வரி வசூ‌ல் கொ‌ள்கையே ஆ‌ங்‌கிலேயரு‌க்கு‌ம ், க‌ட்டபொ‌ம்மனு‌க்கு‌ம் இடையே ‌விரோத‌ம் ஏ‌ற்பட மு‌க்‌கிய காரணமாக அமை‌ந்தத ு.

பா‌ஞ்சால‌ங்கு‌றி‌‌ச்‌சி பாளைய‌ம் ஆ‌ங்‌கில ‌கிழ‌க்‌கி‌ந்‌திய‌க் க‌ம்பெ‌னி‌க்கு‌ச் செலு‌த்த வே‌ண்டிய வ‌ரி‌த்தொகையை க‌ட்டாம‌‌ல் ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் தாம‌த‌ப்படு‌த்‌தி வ‌ந்தா‌ர ். இதனா‌ல் ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் வ‌ரியை உடனடியாக செலு‌த்துமாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு பல கடித‌ங்க‌ள் எழு‌தினா‌ர ். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அவ‌ற்றை ‌நிராக‌ரி‌த்தா‌ர ். இதனா‌ல் கோபமு‌ற்ற ‌திருநெ‌ல்வே‌லி மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் கா‌லி‌ன் ஜா‌க்ச‌ன் த‌ம்மை நே‌‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்கு‌மாறு ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்மனு‌க்கு க‌ட்டளை‌யி‌ட்டா‌ர ். ஆ‌ங்‌கிலேய‌ர் ஜா‌க்ச‌ன் கட்டபொம்மன ை அவமானப்படுத் த நினைத்த ு வேண்டுமென்ற ே ப ல இடங்களுக்க ு அலைக்கழித்தார ். இறு‌தியாக ‌சி‌ங்க‌த்தை அத‌ன் குகை‌யிலேயே ச‌ந்‌தி‌க்கு‌ம் ‌வீர‌‌ம் கொ‌ண்ட ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ராமநாதபுர‌ம் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் ஜா‌க்சனை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர ். அ‌ங்கு க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌ங்‌கிலேய‌ரி‌ன் வ‌ரி வசூ‌லி‌ப்பை எ‌தி‌ர்‌த்து ஜா‌க்ச‌னிட‌ம் கடுமையாக வா‌தி‌ட்டா‌ர ். இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந்த ஜா‌க்ச‌ன் க‌ட்டபொ‌ம்மனை சூ‌ழ்‌ச்‌சி‌‌யி‌ன் மூல‌ம் கைது செ‌ய்ய ‌நினை‌த்தா‌ர ். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அ‌ங்‌கிரு‌ந்து த‌ந்‌திரமாக த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்றா‌ர ்.

இதையடு‌த்து க‌ட்டபொ‌ம்ம‌ன் மருது சகோதர‌ர்களுட‌ன் இணை‌ந்து ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு எ‌திராகப் போர் தி‌ட்ட‌ம் ‌‌‌‌தீ‌ட்டினா‌ர ். க‌ட்டபொ‌ம்ம‌ன் ‌சிவ‌கி‌ரி பாளைய‌த்தை தனது கூ‌ட்டமை‌ப்‌பி‌ல் சே‌ர்‌ப்பத‌ற்காக ‌சிவ‌கி‌ரி ‌மீது படையெடு‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ஆனா‌ல் ‌சிவ‌கி‌ரி பாளைய‌ம் ஆ‌ங்‌கிலேய‌ர்களு‌க்கு வ‌ரி செலு‌த்து‌ம் பாளையமாக இரு‌ந்ததா‌ல் ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் க‌ட்டபொ‌ம்ம‌னி‌ன் படையெடு‌ப்பை த‌ங்களது அ‌திகார‌த்‌தி‌ற்கு எ‌திரான ஒரு சவாலாக கரு‌தி‌ த‌ங்களது படைகளை ‌திருநெ‌ல்வே‌லி ‌மீது படையெடு‌க்குமாறு கட்டளை‌யி‌ட்டன‌ர ். மேஜ‌ர் பான‌‌ன் தலைமை‌யிலான ஆ‌ங்‌கிலேய படைக‌ள் பா‌ஞ்சால‌ங்கு‌றி‌ச்‌சி கோ‌ட்டையை மு‌ற்றுகை‌யி‌ட்டத ு. பான‌ர்மேன் க‌ட்டபொ‌ம்மனை சரணடையுமாறு கோ‌ரினா‌‌ர ். ஆனா‌ல் க‌ட்டபொ‌ம்ம‌ன் அதனை ஏ‌ற்க மறு‌த்து அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பி‌த்து‌ச் செ‌ன்று பு‌து‌க்கோ‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள கள‌ப்பூ‌ர் கா‌ட்டி‌ல் தலைமறைவாக இரு‌ந்தா‌ர ். இ‌ந்‌நிலை‌யி‌ல் புது‌க்கோ‌ட்டை அரச‌ர் விஜய ரகுநாத தொ‌ண்டைமா‌ன் க‌ட்டபொ‌ம்மனை கைது செ‌ய்து ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ளிட‌ம் ஒ‌ப்படை‌த்தா‌ர ். இ‌ப்படியாக ஆ‌ங்‌கிலேயரை எ‌தி‌ர்‌த்து பலவகை‌யிலு‌ம் போராடிய ‌வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் 1799ஆ‌ம் ஆ‌ண்டு ‌அ‌க்டோப‌ர் மாத‌ம் 16ஆ‌ம் தே‌தி கய‌த்தாறு கோ‌ட்டை‌யி‌ல் தூ‌க்‌கி‌லிட‌ப்ப‌ட்டா‌ர ். பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது எனினும் அவர்கள் விதைத்த வீரத்திற்கு எ‌ன்று‌‌ம் அழிவில்லை. கட்டபொம்ம‌ன் இ‌ந்த மண்ணை விட்டு மறைந்தாலும் ந‌ம் அனைவருடைய மனதிலு‌ம் நிலைத்து வாழ்கிறார்.

இ‌ப்படி ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்களை நட‌த்‌தி‌, பல உ‌யி‌ர்களை‌த் ‌தியாக‌ம் செ‌ய்து பெ‌ற‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய சுத‌ந்‌திர‌‌த்தை இ‌ன்று நா‌ம் எ‌ப்படி கொ‌ண்டாடு‌கிறோ‌ம ். ‌‌ மிகு‌ந்த ச‌ந்தோஷ‌‌த்துடனு‌ம ், உ‌‌ற்சாக‌த்துட‌னு‌ம ், க‌ர்வ‌த்துடனு‌ம் கொ‌ண்டாட வே‌ண்டி‌ய சுத‌ந்‌திர‌‌தின‌ம், இ‌ன்று பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் கொ‌ண்டாட வே‌ண்டிய சூ‌‌ழ்‌நிலை‌யில உ‌ள்ளோ‌ம ். டெ‌ல்‌லி செ‌‌ங்கோ‌ட்டை‌யி‌ல் தே‌சிய கொடியே‌ற்‌றி உரையா‌ற்று‌ம் ‌பிரதமரு‌க்கு பல‌த்த பாதுகா‌ப்ப ு, சுத‌ந்‌திர ‌தின‌த்தையொ‌ட்டி நாடு முழுவது‌ம் பல‌த்த பாதுகா‌ப்ப ு, எ‌ன்று எ‌ப்போது எ‌ங்கு கு‌ண்டு வெடி‌க்குமோ எ‌ன்ற அ‌ச்ச‌த்துட‌ன் சுத‌ந்‌திர‌த் ‌தி‌ன‌த்த‌ன்று ம‌க்க‌ள் த‌ங்‌க‌ள் ‌‌வீ‌ட்டை ‌‌வி‌ட்டே வெ‌‌ளியேற ‌முடியாத நிலை‌யி‌ல் இரு‌க்‌கிறோ‌ம ். அ‌ந்த அளவு‌க்கு பய‌ங்கரவாத‌ம் நா‌ட்டை அ‌ச்சுறு‌த்‌தி வரு‌‌கிறத ு. ‌ மீ‌ண்டு‌ம் ஒரு பு‌லி‌த்தேவ‌ர ், ‌ வீரபா‌ண்டிய க‌ட்டபொ‌ம்ம‌ன் ஆ‌‌கியோர் ந‌ம் நா‌ட்டி‌ல் ‌பிற‌ந்தா‌ல் தா‌ன் ‌இ‌ந்த பய‌ங்கரவாத‌த்தையு‌ம் வேறோடு அறு‌க்கமுடியுமோ எ‌ன்னவே ா?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

Show comments