Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முது​மலை புலி​கள் காப்​ப​கம் மூடப்​ப​டு​கி​றது

Webdunia
வியாழன், 13 மே 2010 (15:42 IST)
சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்காக ச‌‌மீப‌த்‌தி‌ல் ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்ட முதுமலை பு‌லிக‌ள் கா‌ப்பக‌ம் நாளை முத‌ல் த‌ற்கா‌லிகமாக மூட‌ப்படு‌கிறது.

முதுமலை பு‌லிக‌ள் கா‌ப்பக‌த்‌தி‌ல் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடை​பெ​ற​வுள்ள ஒருங்​கி​ணைந்த யானை​கள் கணக்​கெ​டுப்பு பணி கார​ண​மாக,​​ முது​மலை புலி​கள் காப்​ப​கம் வெள்​ளிக்​கி​ழமை ​(மே 14) முதல் 17-ம் தேதி வரை மூடப்​ப​டு​கி​றது.​

முது​மலை புலி​கள் காப்​பக கள இயக்​கு​நர் ராஜீவ் ஸ்ரீவத்​சவா கூறுகை‌யி‌ல், முது​மலை புலி​கள் காப்​ப​கத்​தில் நடை​பெ​ற​உள்ள ஒருங்​கி​ணைந்த யானை​கள் கணக்​கெ​டுப்பு பணி​யின்​போது,​​ வன உயி​ரி​னங்​க​ளுக்கு இடை​யூறு ஏற்​ப​டாத வகை​யில் இச்சர​ணா​ல​யம்,​​ 14-ம் தேதி பிற்​ப​கல் முதல் 17-ம் தேதி பிற்​ப​கல் வரை மூடப்​பட உள்​ளது.​

இந்த 3 நாட்​க​ளும் முது​மலை புலி​கள் காப்​ப​கத்​தைப் பார்ப்​ப​தற்கு சுற்​று​லாப் பய​ணி​கள் அனு​ம​திக்​கப்​ப​ட​மாட்​டார்​கள்.​ இத‌ற்கு பொது​மக்​க​ளும்,​​ சுற்​று​லாப் பய​ணி​க​ளும் ஒத்​து​ழைப்பு அளிக்க வேண்​டு​மென ராஜீவ் ஸ்ரீவத்​சவா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

Show comments