Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரம்

Webdunia
அழகிய நிலப் பகுதிகள் கொண்ட இந்தியாவில் பாரம்பரிய சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

திராவிட கட்டிடக் கலை பாணியை பிரதிபலிக்கும் கோயில்கள ், புராணக் கதை நிகழ்வுகள ், சிற்பங்களின் கருவூலமாக திகழ்கிறது மாமல்லபுரம். தமிழ்நாட்டை பொருத்தவரை சிற்பக் கலைகளின் திருப்புமுனையாக அமைந்துள்ள மாமல்லபுரம் அக்காலத்து சமூக நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.

சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரமானது மகேந்திரபல்லவராலும ், மாமல்லநரசிம்மராலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட போக்கிஷம்.

குடைவரைகள ், ஒற்றைக்கல் தளிகள் போன்றவையெல்லாம் பண்டையக் காலத்து கட்டுமானக் கோயில்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றன. கட்டிடங்களாக மட்டுமின்றி ஏராளமான சிற்பங்களையும் தம்மகத்தே கொண்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அழகிய கற்கோயில் காண்போரின் கண்களை வெகுவாக கவர்கிறது. குன்றுகளை குடைத்தெடுத்த கோயில்களை போன்றதல்ல இக்கோயில ், குன்றுகளிலிருந்து கற்களை பெயர்த்து கொண்டுவந்து கட்டப்பட்ட கோயிலாக காட்சியளிக்கிறது.

தமிழகத்திற்கு அழியாப் புகழ் அளிக்கும் வகையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தின் அற்புத சிலைகள் 300 ஆண்டுகளாகியும் பொலிவுடன் காணப்படுவது வியப்புக்குறிய விஷயமாகவே உள்ளது.

மாணவர்கள் மற்றும் சிற்பிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிற் ப, சித்திரக்கூடங்களும் இங்கு உள்ளன. பழைய கலங்கரை விளக்கம ், கொடிக்கால் மண்டபம ், அர்ஜீனன் தவம ், குகைகள ், அஞ்சுரதம ், கிருஷ்ண மண்டபம் என காணத்தக்க இடங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

என்ன மகாபலிபுரத்தின் சிற்பங்களை காண தயாராகிவிட்டீர்கள ா?

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments