Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தேசிய புகைப்பட கண்காட்சி

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2009 (10:58 IST)
சென்னை புகைப்பட சங்கம் சார்பில், 2009-ம் ஆண்டு தேசிய புகைப்பட கண்காட்சி கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் துவ‌ங்‌கியு‌ள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சியை ‌ சி‌னிமா இய‌க்குந‌ர ் பாலு மகேந்திரா நேற்று துவ‌க்‌கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, சென்னை புகைப்பட சங்கத்தின் தலைவர் கே.ஓ. ஐசாக் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த புகைப்பட கண்காட்சியில், இந்தியாவில் சிறந்து விளங்கும் புகைப்பட கலைஞர்களிடம் இருந்து தேர்வு செய்யப்பட்ட 289 புகைப்படங்கள், பல வண்ண நிறங்கள் மற்றும் கருப்பு வெள்ளையில் இடம்பெற்றுள்ளன.

தாவரங்கள், விலங்குகள், இந்திய திருக்கோவில்கள், இரவு நேர வீதிகள் ஆகியவற்றின் எதார்த்தமான புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சென்னை பற்றிய அரிய புகைப்படங்களும் கண்காட்சியில் உள்ளன.

மேலும், சென்னை புகைப்பட சங்க உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை வரும் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை, விஜய் இரங்கல்..!

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

முடிஞ்சா உன் ஆளை காப்பாத்திக்கோ..! சல்மான்கானுக்கு சவால் விட்ட பிஷ்னோய் கும்பல்!

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர் இவரா?

Show comments