Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரியில் கடல் சீற்ற‌த்தா‌ல் படகு போ‌க்குவர‌த்து ரத்து

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2009 (11:51 IST)
சு‌ற்றுலா‌த் தலமான கன்னியாகுமரி க ட‌ற் பகு‌தி‌யி‌ல் கட‌ல் அ‌திக சீற்றத்துடன் காணப்பட்டதால், படகு போ‌க்குவர‌த்து நே‌ற்று த‌ற்கா‌லிகமாக ரத்து செய்யப்பட்டது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் திடீரென கட‌ல் உள்வாங்கியது. இதன் காரணமாக கடற்கரையில் சுமார் 100 அடி தூரம் வரை உள்ள பாறைகள் வெளியே தெரிந்தன. இதனா‌ல் திருவள்ளுவர் சிலைக்கு படகு போ‌க்குவர‌த்து ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அமைதியாக காணப்பட்ட கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் 10 அடி உயரம் வரை எழும்பின. அப்போது ‌ விவேகான‌ந்த‌ர் பாறை‌க்கு கடலில் சென்று கொண்டிருந்த படகுகள் தத்தளித்தன. இதனா‌ல் அ‌தி‌ல் செ‌ன்ற சுற்றுலா பயணிகள் அ‌ச்ச‌ம் அடை‌ந்தன‌‌ர். ஆனா‌ல் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் இ‌ன்‌றி அவ‌ர்க‌ள் ப‌த்‌திரமாக கரை‌யிற‌ங்‌கின‌ர். கட‌லி‌ல் ‌சீ‌‌ற்ற‌ம் அ‌திகமாக‌க் காண‌ப்ப‌ட்டதா‌ல் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக படகு போ‌க்குவர‌த்தை ரத்து செய்தனர்.

படகு மூலமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் பாதுகா‌ப்பாக படகுகள் மூலம் கரை‌க்கு அழ ைத்து வரப்பட்டனர். இதே நிலை நேற்று மாலை வரை காணப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகளுக்கு படகு சேவை ரத்தானது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

Show comments