Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகா‌‌க்க‌ப்ப‌ட்ட மெ‌ரினா நாளை ‌திற‌க்க‌ப்படு‌கிறது

Webdunia
சனி, 19 டிசம்பர் 2009 (12:30 IST)
ஆ‌சியா‌விலேய ே ‌ மிக‌ப்பெ‌ரி ய கட‌ற்கர ை எ‌ன் ற புகழை‌ப ் பெ‌ற் ற மெ‌ரின ா கட‌ற்கரை‌‌யி‌ல ் பறவை வடிவிலான அலங்கார மின்விளக்குகள், பூங்காக்கள், நடைமேடை க‌ ள ் எ ன ப‌ல்வேற ு அல‌ங்கா‌ர‌ப ் ப‌ணிக‌ள ் சுமா‌ர ் 25 கோடியே 92 லட்சத்தில் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த ப‌ணிக‌ள ் முடி‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அழகுபடுத்தப்பட் ட மெ‌ரினாவ ை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் கருணாநிதி நாளை திறந்து வைக்கிறார்.

உலகில் உள்ள நீளமான கடற்கரையில் சென்னை மெரினா கடற்கரையும் ஒன்றாகும். சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செ‌ல்வா‌ர்க‌ள ். இ‌ந் த எ‌ண்‌ணி‌க்க ை வா ர ‌ இறு‌த ி நா‌ட்க‌ளிலு‌ம ், ப‌ண்டிக ை ‌ விடுமுற ை நா‌ட்க‌ளிலு‌ம ் ல‌ட்ச‌த்த ை எ‌ட்டு‌ம ்.

தினமும் இது போன்று மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, சென்னை மெரினா கடற்கரையை உலக கடற்கரை தரத்திற்கு உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்காக 25 கோடியே 92 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெரினா கடற்கரை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை காமராஜர் சாலையில் கிழக்குப்பக்கம் 3.1 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை கருங்கல் பலகை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், கடற்கரையில் அழகை ரசிக்கவும் 14 இடங்களில் வண்ண வண்ண கருங்கற்கள், கிரானைட் கற்கள் கொண்டு கடற்கரையை பார்த்த வண்ணம் உட்காரும் வகையில் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கட‌ற்கரை‌க்க ு அருக ே உ‌ள் ள நடைபாதைக்கும்-கடற்கரை பயன்பாட்டு சாலைக்கும் இடையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்காக 4 இடங்களில் நவீன பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

கண்ணகி சிலை அருகே நவீன முறையில் நடைபாதை சுரங்கப்பாதையும், கடற்கரை சுற்றிலும் கண்கவரும் வகையில் பறவை வடிவிலான மின்விளக்குகள் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவில் பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்காக நீர்வீழ்ச்சிகளுக்கு இடையில் வண்ண விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையை சுற்றி நவீன வசதிகளுடன் பஸ் நிறுத்தங்கள், வாகனங்களை நிறுத்துவதற்காக நவீன கார் நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ள ன.

இந்த அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்கான விழா காலை 10 மணியளவில் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

Show comments