Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நஞ்சறுப்பான் மூலிகை எதற்காக பயன்படுத்தப்படுகிறது ??

Webdunia
புதன், 19 மே 2021 (23:34 IST)
நஞ்சறுப்பான் இலை விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி உண்டாக்கும். உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரின் சாறு ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது.
 
 
இது நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய, சுற்றிப்படரும் கொடி வகைத் தாவரமாகும். இலைகள் முட்டை வடிவமானவை. எதிர் எதிராக தண்டில் அமைந்திருக்கும் 5  10 செமீ நீளத்தில் பெரும்பாலும் நுனியை நோக்கியிருக்கும்.
 
கரிப்பாலை, நஞ்சு முறிச்சான் கொடி, கொடிப்பாலை, அந்தமூல், காகித்தம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. இலை, வேர், ஆகியவை சிறப்பான மருத்துவப் பயன் கொண்டவை.
 
நஞ்சறுப்பான் இலை, வேர், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வியர்வையைப் பெருக்கும்; கோழையகற்றும்; விஷ நச்சுகளை முறிக்கும்; வாந்தி  உண்டாக்கும்.
 
உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரை காய்ச்சி வடித்த சாறு மூச்சுக்குழல் அழற்சிக்கு உபயோகமாகின்றது. மேலும் இதன் வாந்தியை உண்டாக்கும் குணத்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது.
 
ஆஸ்துமா கட்டுபட நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு கால் முதல் அரை கிராம் அளவு தினமும் 3 வேளைகள் தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.
 
நஞ்சை வெளியாக்க இலைகளை நன்கு அரைத்து, எலுமிச்சம் பழ அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது இலை, வேர் ஆகியவற்றை உலர்த்தி தூள் செய்து  வைத்துக் கொண்டு, 2 தேக்கரண்டி அளவுடன் சிறிதளவு மிளகுத் தூள் கலந்து தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments