Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் மூலிகை குளியல் பொடி தயார் செய்வது இப்படித்தான்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (00:20 IST)
மூலிகைகளைக் கொண்டு நமக்கு தேவையான குளியல் பொடியை வீட்டிலே தயாரிக்கலாம்.
 
மூலிகை குளியல் பொடிக்கு தேவையான பொருட்கள்: சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, மாகாளிக்கிழங்கு, பூந்திக்கொட்டை, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, பச்சை பயறு, ஆரஞ்சு பழத்தோல், கடலை பருப்பு.
 
 
Ads by 
 
மேற்கண்ட மூலிகை சரக்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.பச்சைப்பயிறு , கடலைப்பருப்பு தவிர மீதி அனைத்தும் சம அளவில் வாங்கி வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடி ஆக்கி சலித்து ஈரமில்லாத டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு மட்டும் நூறு கிராம் அளவு எடுத்து கொள்ளவும்.
 
இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊறவைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
 
இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள்  மறைந்து முகம் மென்மையாக மாறும்.
 
தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும். வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை  நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும் தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments