Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரிக்கொழுந்தின் அற்புத மருத்துவ குணங்கள்...!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (00:41 IST)
மணம் தரும் அற்புதமான மூலிகை மரிக்கொழுந்து. ஆரோக்கியத்தை தரும் இது, பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. நோய் கிருமிகளை தடுக்கிறது. வலியை  போக்குகிறது, வீக்கத்தை வற்ற செய்கிறது. மன அழுத்தத்தை போக்கும் ஒன்றாக விளங்குகிறது.
 
மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, நல்லெண்ணெய்,  சுக்குப்பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி  இளஞ்சூடாக தலையில் பற்றாக போட்டுவர தலைவலி சரியாகும்.    
 
மரிக்கொழுந்தை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, தேங்காய் எண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுது சேர்த்து  தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்திவர தோல்நோய்கள் குணமாகிறது.  பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய்  வராமல் தடுக்கிறது. எவ்வகை வலியையும் போக்க கூடிய தன்மை உடையது. 
 
அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. உள், வெளி மருந்தாகவும், விஷத்தை முறிக்க கூடியதாக மரிக்கொழுந்து விளங்குகிறது.மூச்சிரைப்பை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: துத்தி பூக்கள், பால். செய்முறை: சாலையோரங்களில் கிடைக்கும் துத்தி பூக்கள் சுமார் 15 எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து காய்ச்சி இனிப்பு கலந்து குடித்துவர ஆஸ்துமா என்கிற மூச்சுமுட்டுதல், மூச்சிரைப்பு நாளடைவில் குணமாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments