Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவ குணங்கள் உள்ள கசகசா...

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (00:17 IST)
கசகசா, மிளகு, பாதாம், கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, அதனுடன் பசும்பால், தேன், நெய் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக்கி, அதில் ½ தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடலின் வலிமை அதிகரிக்கும்.
 
கசகசாவை, மாதுளம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும். 2 தேக்கரண்டி அளவு கசகசாவை. ¼ டம்ளர் பாலில் ஊறவைத்து, பசைபோல அரைத்து, அதை குழந்தைகளுக்கு கொடுத்தால், சீதபேதி குணமாகும்.
 
½ கோப்பை அளவு கொப்பரைத் தேங்காயைப் பூவாகச் சீவி, ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து, அரைத்து, அதை துவையலாக, சாப்பிட்டால், வாய்ப்புண் குணமாகும். கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்  குணமாகும்.
 
கசகசா சாலாமிசிரி பூனைக்காலி விதை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து கொள்ளவும் இதில் ஐந்து கிராம் பொடியை, தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
 
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர்  குடித்தால், வயிற்றுப்போக்கு குறையும். 
 
கசகசா முந்திரி பருப்பு , பாதாம் பருப்பு தலா 100 கிராம் எடுத்து அரைத்துக்கொள்ளவும் . இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை,  மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். 
 
கசகசா முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்  முகம் அழகு பெறும். 
 
கசகசா ஜவ்வரிசி பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்புவலி  குணமாகும். கொத்தமல்லியுடன் 20 கிராம் கசகசா 3 கிராம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும். 
 
கசகசா முள்ளங்கி சாறில் ஊறவைத்து அரைத்து தேமல், படை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில்  குணமாகும். 
 
10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த  இடத்தில் தடவினால் அம்மை தழும்புகள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments