Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்
, புதன், 13 ஜூலை 2016 (16:25 IST)
எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு.


 
 
உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.
 
குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது.
 
இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம்.
 
பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.
 
1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.
 
2. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.
 
3. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.
 
4. அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
 
5. 200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு, 8. 100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு ஆகிய கலவைகளின் சாறுகளை சம அளவு எடுத்து தினமும் பருக வேண்டும்.
 
6. வாசனை எண்ணெய்யால் தலைக்கு ஒத்தடம் தரலாம். தேய்த்து விடலாம்.
 
7. பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
 
8. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெண்டை மொச்சை மண்டி