Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள கொழுப்பை கரைத்து ஜீரணத்தை துரிதப்படுத்தும் இஞ்சி!!

Webdunia
இஞ்சி என்பதற்கு மதில் என்று அர்த்தம். நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை மதில் போல் இருந்து காப்பதால் இதற்கு இஞ்சி என பெயர் வந்தது. இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதுவும் பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

 
இஞ்சி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் பல சத்துக்களும் உள்ளன.
 
இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.
 
* அதிகாலை இஞ்சிச் சாறு பித்தப் பிணிகளை விரட்டும். இஞ்சி எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் மலிவாகக் கிடைக்கறது. மருத்துவ குணங்கள் மிகுந்தது.
 
* காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும், மதிய உணவுக்குப் பின் சுக்கு, கருப்பட்டி கலந்த சுக்கு கசாயமும், மாலையில் (இரவு உணவுக்கு பின்) கடுக்காய் சூரணம் என 48 நாட்கள் (மண்டலம்) சாப்பட்டு வந்தால் உடல் சோர்வு இன்றி சுறுசுறுப்பாக இருக்கலாம்.
 
* இஞ்சி பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
 
* ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. 
 
* மகளிரின் கருப்பைவலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது. தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. 
 
* இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். 
 
* இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். 
 
* எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அடுத்த கட்டுரையில்