Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய்களை குணமாக்கும் முருங்கை விதைகள்...

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (23:28 IST)
முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. முருங்கைக்காய் அதிக சத்து நிறைந்த காயாகும்.
 
முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய  சத்துக்கள் அடங்கியுள்ளது.
 
முருங்கைக்காயைவிட முருங்கைக்காயின் விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. அதுவும்  இந்த முருங்கை விதைகள் பல நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.
 
முருங்கை விதைகளில் 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் உள்ளது. அவை அனைத்தும் நம் உடம்பில் உள்ள செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 
முருங்கை விதையில் உள்ள கால்சியம் சத்து, மூட்டுகள் மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
 
பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலத்தை தரும். இரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும்.
 
இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும். மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும்.
 
முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்த சோகை நீங்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments