Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளி விதையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா...?

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (00:39 IST)
முளைகட்டிய ஆளி விதையில், அதிலுள்ள பைட்டிக் ஆசிட் நீக்கப்படுவதால், அதன் தாதுக்களை உடல் உட்கிரகிக்கத் தூண்டுகிறது. முளைக்க வைக்க நேரம்  இல்லாதவர்கள் இதமான சுடுநீரில் பத்து நிமிடம் ஊறவைத்து பின் பயன்படுத்தவும்.
 
ஆளி விதையை உட்கொள்ளுவதில் மிக எளிதான வழி என்னவென்றால், அரைத்து மாவாக்கவும். மாவாக்க மிக்ஸியே போதுமானது இந்த முறையில் எடுக்கும்  போது நிறைய நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கழிவாக வெளியேறிவிடும்.
Ads by 
 
காலை உணவாக ஸ்மூத்தி, சாலட், ஓட் மீல்ஸ் அல்லது பான்கேக் எடுத்து கொள்ளும் போது ஒரு ஸ்பூன் பிளாக்ஸ் சீட் மாவை சேர்த்து கொள்ளலாம்.
 
பிளாக்ஸ் சீட் ஆயில் என்று கிடைக்கிறது அதை பயன்படுத்தும் போது சூடுபடுத்தக்கூடாது. சாலட்டில் ஊற்றி சாப்பிட வேண்டும்.அதே சமயம் ஆளிவிதைகளை வறுத்து சாப்பிடலாம்.இந்த முறையில் சத்துக்கள் வீணாகாது.
 
தயிர் பச்சடி, யோகர்ட்களில் பொடி செய்த ஆளிவிதைகளை சேர்த்து கொள்ளலாம். சப்பாத்தி, பூரி செய்யும் போது ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் என்ற அளவில் கோதுமை மாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தும்மல் ஏற்படுவது எதனால்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

காய்கறிகளை சமைக்காமல் உண்பாதால் கிடைக்கும் பலன்கள்..!

இளமையில் நரைமுடி பிரச்சனையா? இதோ ஒரு தீர்வு..!

ஆரோக்கியமான வாழ்விற்கு தினசரி செய்ய வேண்டிய முக்கிய விஷயஙகள்..!

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments